அமித்ஷா வீட்டிற்குள் சென்ற அமரீந்தர் சிங் கார்.. அதிர்ச்சியில் காங். மேலிடம்.. பஞ்சாப் திருப்பம்
டெல்லி : முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர்சிங் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் அவர் நேற்றே டெல்லி சென்றார். இன்று கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். அவரது கார் அமித்ஷாவின் இல்லத்திற்கு விரைந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. நவ்ஜோத்சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் துணை முதல்வர் பதவிக்காக மல்லுக்கட்டினார் சித்து.
ஆனால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரவே முடியாது என்பதில் மாஜி முதல்வர் அமரீந்தர்சிங் உறுதியாக இருந்தார். அதனால் வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் மேலிடம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கப்பட்டார் சித்து.

சித்து போர்க்கொடி
அதன்பின்னர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து. அப்போதும் கூட காங். மேலிடம் அமரீந்தர்சிங்க்குக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அமரீந்தர்சிங்குக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்களை சித்து தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது. அமரீந்தர் சிங் பதவிக்கு ஆபத்து வந்தது.

கடும் கோபம்
இதனால் வேறுவழியே இல்லாமல் அமரீந்தர்சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தனக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் சித்து. ஆனால் பதவி விலகிய அமரீந்தர்சிங், சித்துவை முதல்வராக்க மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால் சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இதற்கிடையே பாகிஸ்தானுடன் உறவு வைத்திருக்கும் தேசவிரோதி சித்து என விமர்சித்தார் அமரீந்தர்சிங். கடைசி வரை சித்துவுக்கு பதவி கிடைக்கவிடாமல் செய்தார் அம்ரீந்தர் சிங்.

அமித்ஷாவை சந்தித்தார்
இதனிடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர்சிங் விரக்தி அடைந்து பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் அவர் நேற்றே டெல்லி சென்றார். இன்று கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். அவரது கார் அமித்ஷாவின் இல்லத்திற்கு விரைந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் அதிர்ச்சி
விரைவில் அமரீந்தர்சிங் பாஜகவில் இணையலாம் என்ற பரபரப்பு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பலமான தலைவரை தேடிக்கொண்டிருந்த பாஜகவிற்கு அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கே கிடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பஞ்சாபில் எளிதாக காங்கிரஸ் வெல்லும் என்ற கணிப்புகள் தவிடுபொடியாகி உள்ளது. இந்த முறை பஞ்சாப் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.












Click it and Unblock the Notifications