தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு பிரநிதிகள் எதிரப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடந்தது. அப்போது தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கர்நாடகா அரசு திடீரென தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்ப தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது வரும் 21 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் போது காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேட்பர் என்பதால் அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக இன்று கூட இருக்கிறது. காணொலி மூலம் இந்த கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நடப்பாண்டில் வர வேண்டிய 103.5 கனஅடி நீரில் 38.4 கனஅடி காவிரி நீர்தான் கிடைத்துள்ளது. எனவே தமிழகத்திற்கு 12500 கன அடி காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வாதம் செய்தது. இதையடுத்து காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications