டிசம்பர் இறுதி வரை.. தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 90வது கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கிய நிலையில் நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தமிழ்நாட்டுக்கு தினமும் 2,700 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுவது இல்லை.

உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்காமல் மழையில்லை, தண்ணீர் இல்லை என தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதோடு காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
மேலும் அங்குள்ள கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பபை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பந்த் போராட்டங்களும் நடந்தன. அதோடு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையையும் முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் மாதம் 22ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ருப்பினும் வேறு வழியின்றி அந்த தண்ணீரை கர்நாடகா தமிழகத்துக்கு திறந்து விட்டது.
இந்நிலையில் தன் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90வது கூட்டம் நடக்கிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் கர்நாடகா நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை என்பது ஓரளவு பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் திறப்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்காது. அதேவேளையில் கர்நாடகா திறந்து விடும் தண்ணீரை மேட்டூர் அணையில் சேமித்து வைக்கவும் முடியும்.
ஏனென்றால் மேட்டூர் அணையில் 23 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. இதனால் கர்நாடகா திறக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியும் என கூறப்பட்டது. இதை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு ‛‛கர்நாடகாவை வினாடிக்கு 2,600 தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தோம். ஆனால் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முந்தைய நிலுவை தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. இதனால் நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தமிழகத்துக்கு தினமும் 2,700 கனஅடி நீரை கர்நாடகா திறக்க பரிந்துரை செய்யப்படுகிறது'' என கூறியது. இதன்மூலம் நாளை முதல் கர்நாடகா தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications