Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு.. தமிழக அரசு மனு.. இன்றே புதிய அமர்வு... உச்சநீதிமன்ற நீதிபதி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி தெரிவித்துள்ளார். 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை இன்றே அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். காவிரியில் கூடுதல் நீர் திறந்து விடக்கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.

காவிரி நீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும்.

Cauvery water case Tamil Nadu government petition New session will be set up today says Supreme Court

கேரளாவிற்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று கூறிய காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணைகள் கட்டக் கூடாது என்பதும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் பின்னர் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

Cauvery water case Tamil Nadu government petition New session will be set up today says Supreme Court

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. கர்நாடகா, கேரளாவிலும் பருவமழை நடப்பாண்டு சரிவர பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைகயில் நீர்மட்டம் 52 அடியாகக் குறையத் தொடங்கியது. குறுவை சாகுபடி தப்புமா என்ற கேள்வி டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 113 பக்க மனுவில், கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், வாதங்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும் அந்த மனுவில் எடுத்துரைக்கப்பட்டு இருந்தது.

மேலும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிக்கை வைத்தார்.

Cauvery water case Tamil Nadu government petition New session will be set up today says Supreme Court

காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி தெரிவித்துள்ளார். 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை இன்றே அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் பட்சத்தில் வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+