ஜூன் மாத நதிநீர் திறப்பு, பங்கீடு- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதம்! மேகதாது லிஸ்ட்டில் இல்லை!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஜூன் மாத நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று விவாதிக்கப்பட்டது.
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி நீர் வழங்க காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றமானது காவிரி வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக குறைத்தது. காவிரி நதிநீர் வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த உருவாக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி நதிநீர் பங்கீடுகள் தொடர்பாக முடிவெடுக்கத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை சேர்க்க கர்நாடகா கோரியது. ஆனால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்க மறுத்தது. இதனால் இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்படவில்லை.
ஜூன் மாதம் பாசன ஆண்டு தொடங்குகிறது. ஆகையால் காவிரி நதிநீர் திறப்பு, பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications