இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்.. மேகதாது விவகாரத்தை எழுப்பும் திட்டத்தோடு கர்நாடகா!
டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் நடக்கிறது. மேகதாது விவகாரம் குறித்து கூட்டத்தில் கர்நாடகா தரப்பு எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீதி பங்கீடு பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடக அரசு போராடி வருகிறது. அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், காவிரியின் குறுக்கே ஏற்கனவே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன; புதிய அணை தேவையில்லை என்றும் 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது என்றும் வாதத்தை முன்வைத்தார். அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி மற்றும் கேரள அரசுகளும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தன.
இருப்பினும், தலைமை நீதிபதி அமர்வு மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA), ஒழுங்காற்றுக் குழு (RRC) ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications