19 மாநிலங்களில் மதுரை உட்பட 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
டெல்லி: நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 30 வழக்குகளுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஊழல், நடத்தை விதிமீறல்கள், ஆயுத கடத்தல் ஆகியவை தொடர்பான 30 வழக்குகளுக்காக 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, பாரத்பூர், மும்பை, சண்டிகர், ஜம்மு, ஶ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, கான்பூர், ராய்ப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ உள்ளிட்ட நகரங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மதுரையிலும் சோதனை நடத்தப்படுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் ரூ1,139 கோடி வங்கி முறைகேடுகள் தொடர்பாக 13 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
சிபிஐ இயக்குநர் ரிஷிகுமார் சுக்லாவின் நேரடி கண்காணிப்பில் இச்சோதனைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications