டெல்லி துணை முதல்வரின் சிபிஐ காவல் நீட்டிப்பு.. கோர்ட்டில் மணிஷ் சிசோடியா வைத்த திடீர் கோரிக்கை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவரது காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவரது காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்த பிறகு நீதிமன்றத்தில் முறையிட்ட மணிஷ் சிசோடியா, சிபிஐ ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறினார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த
கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும் இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பல கோடி ரூபாய் லஞ்சம்

பல கோடி ரூபாய் லஞ்சம்

இதற்கு கைமாறாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா கவனத்திற்கு சென்ரதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சிபிஐ டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

சிபிஐ அதிரடி சோதனை

சிபிஐ அதிரடி சோதனை

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணையும் மேற்கொண்டது. பிறகு டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமை செயலகத்தில் உள்ள மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் பெயரும் அடிபட்டது.

4 நாட்கள் சிபிஐ நாள்

4 நாட்கள் சிபிஐ நாள்

இந்த வழக்கின் விசாரணையை தீவிரமாக நடத்திய சிபிஐ கடந்த மாதம் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மணிஷ் சிசோடியாவிற்கு சம்மன் அனுப்பியது. அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை அன்றே கைது செய்தனர். மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இதன்படி சிபிஐக்கு 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி கொடுத்தது.

மேலும் 2 நாட்கள் காவல்

மேலும் 2 நாட்கள் காவல்

இந்த 4 நாள் காவல் இன்றுடன் முடிவுக்கு வந்தந்தையடுத்து இன்று மணிஷ் சிசோடியா மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மணிஷ் சிசோடியாவின் காவலை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐயின் கோரிக்கை வைத்தது. இதையடுத்து மணிஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்த கோர்ட் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மணிஷ் சிசோடியா திடீர் கோரிக்கை

மணிஷ் சிசோடியா திடீர் கோரிக்கை

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்த மணிஷ் சிசோடியா, சிபிஐ தன்னை நன்றாகவே நடத்தினாலும் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளை எழுப்பி கேட்பது மன ரீதியாக துன்புறுத்தலுக்கு நிகரானது என்று கூறினார். இதையடுத்து, ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் எனவும் சிபிஐ அதிகாரிகளை கோர்ட் கேட்டுக்கொண்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+