டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரவுகளை மதிக்கவில்லை... மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ புதிய மனு

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதாக மேற்கு வங்க தலைமை செயலாளர், டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் மீது உச்சநீதி மன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் மமதா பானர்ஜியின் போராட்டத்தின் எதிரொலியாக.. உச்சநீதிமன்ற உத்தரவுகளை வேண்டும் என்றே மீறியதாக மேற்குவங்க தலைமை செயலாளர், டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

Cbi filed a contempt plea in apex court against west bengals chief secretary, dgp, police commissioner

சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருடன் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி, ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதில் சாரதா நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்தச்சென்ற சிபிஐ அதிகாரிகள் 5 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கொல்கத்தா காவல் ஆணையரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும்.

பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை. விசாரணைக்கு சென்றால் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தடைகளை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை நடத்துகிறது.

தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் இந்த நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில் உச்சநீதி மன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதாக மேற்கு வங்க தலைமை செயலாளர், டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

English summary
CBI has filed a contempt plea in the Supreme Court against West Bengal's Chief Secretary, Director General of Police and Kolkata Police Commissioner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X