ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. ப.சி மீது வழக்கு தொடரலாம்… சிபிஐக்கு அனுமதி
டெல்லி:ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்குத் தொடர சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு மத்திய வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. அதற்கு பிரதிபலனாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு ரூ.305 கோடி முறைகேடாக பணம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாடு செல்ல நீதிமன்றம் அளித்த உத்தரவை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்துவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல், வழக்கை தாமதப் படுத்துவதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
இதுதொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சட்டத்தோடு விளையாட வேண்டாம் என்று எச்சரித்தது. ஒரு வழியாக அந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதித்தது.
அதற்காக, ரூ.10 கோடிக்கான பிணைத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந் நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்குத் தொடர சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சகம் சிபிஐ-க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர கடந்த மாதம் மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications