கிருஷ்ணகிரி வெடி விபத்து.. சிபிஐ விசாரணை தேவை.. மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி தம்பித்துரை கோரிக்கை
டெல்லி: கிருஷ்ணகிரியில் 9 பேரின் உயிர் பறிபோக காரணமாக இருந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அதிமுக எம்.பி தம்பித்துரை கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல. சிலிண்டர் தானாக வெடிக்காது. குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே விபத்திற்கும், 9 பேர் உயிரிழப்பிற்கும் காரணம் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் கடந்த 29 ஆம் தேதி காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.
இந்த பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். அதோடு நிவாரண உதவித்தொகையும் அறிவித்தனர்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி, தம்பிதுரை இந்த விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பதிலளிக்கையில், கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல. சிலிண்டர் தானாக வெடிக்காது. குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே விபத்திற்கும், 9 பேர் உயிரிழப்பிற்கும் காரணம். வெடி விபத்து ஏற்பட்ட ஓட்டல் இருந்த பகுதிக்கு சமையல் சிலிண்டர் விநியோகமே செய்யப்படவில்லை என பதிலளித்தார்.
இதனிடையே கிருஷ்ணகிரியில் நிகழ்ந்த வெடி விபத்துக்கு காரணம் சட்ட விரோத கல் குவாரிகளுக்கான வெடி மருந்தை பதுக்கியதே காரணம் என்று விபத்து நிகழ்ந்த போகனப்பள்ளி பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பட்டாசு கடை அருகில் செயல்பட்டு வந்த ஹோட்டலில் இருந்து சிலிண்டர் வெடித்துதான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரும் தடய அறிவியல் துறையினரும் கூறியுள்ள தகவலை அந்த ஹோட்டல் உரிமையாளர்களின் உறவினர்கள் மறுத்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கடை உரிமையாளரின் மகன், எங்கள் கடையில் சிலிண்டர் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உள்ளது. எனது அம்மாவின் உடலில் சிறு தீக்காயம் கூட கிடையாது. சுவர் இடிந்து விழுந்துதான் எனது அம்மா உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்துதான் விபத்து ஏற்பட்டதாக பொய் சொல்கின்றனர் என்றும் ஹோட்டல் கடையின் உரிமையாளரின் மகன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பட்டாசு கடை விபத்து நிகழ்ந்தது பற்றி சிபிஐ விசாரணைக்கு அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக எம்பி தம்பிதுரை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மாநில அரசு இந்த வெடி விபத்தினை சாதாரணமாக விசாரணை செய்து வருவதாகவும் தம்பித்துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications