பெரும் பின்னடைவு.. சிபிஐக்குள் மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக்கொண்ட மத்திய அரசு!
சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்குகிறார்.
கடந்த இரண்டு மாதமாக நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

மத்திய அரசு
மத்திய அரசு இந்த வழக்கு மூலம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான், சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பில் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் மத்திய அரசு அவர்களுடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

முக்கிய அமைப்பு
ஏற்கனவே ஆர்பிஐ அமைப்பில் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்று புகார் வந்தது. இந்த நிலையில் தற்போது சிபிஐ அமைப்பில் தலையிட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கொட்டு வாங்கியுள்ளது. சிபிஐ அமைப்பின் சுதந்திரம் இதனால் மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஏன் மோடி
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடிதான் கடந்த அக்டோபர் 23ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தார். இப்போது அந்த மோடியின் உத்தரவு செல்லாது என்றுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இரவோடு இரவாக எடுத்த முடிவை சுப்ரீட் கோர்ட் ரத்து செய்துள்ளது.

மிக மோசம்
ரபேல் தொடர்பான ஆவணங்களை கேட்டதன் காரணமாகத்தான் அலோக் வெர்மா விடுப்பில் செல்ல வைக்கப்பட்டார் என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு காரணமாக எல்லோரின் பார்வையும் மீண்டும் ரபேல் மேல் விழுந்து இருக்கிறது. சிபிஐ ரபேல் வழக்கை கையில் எடுக்குமா என்று பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications