கொல்கத்தா கமிஷனர் ஆதாரங்களை கசியவிட்டுள்ளார்.. சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் சொன்னது என்ன?
சாரதா ஊழலில் தொடர்புடையவர்களிடம் கொல்கத்தா கமிஷனர் அந்த ஊழலின் ஆதாரத்தை கசியவிட்டு இருக்கிறார் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: சாரதா ஊழலில் தொடர்புடையவர்களிடம் கொல்கத்தா கமிஷனர் அந்த ஊழலின் ஆதாரத்தை கசியவிட்டு இருக்கிறார் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்க போலீசுக்கு எதிராக நேற்று சிபிஐ வழக்கு தொடுத்து இருந்தது. கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ வழக்கு தொடுத்து இருந்தது.
இதில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிறகு விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரமாணபத்திரம் தாக்கல்
கொல்கத்தா கமிஷனருக்கு எதிராக வழக்கில் தற்போது சிபிஐ பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ சீலிடப்பட்ட கவரில் ஆதாரங்களை தாக்கல் செய்யும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரமாணபத்திரத்தை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

தகவல்
சிபிஐ அதில், கொல்கத்தா கமிஷனர் சில முக்கியமான ஆதாரங்களான லேப்டாப்,போன்கள், வாக்குமூலங்களை கசியவிட்டுள்ளார். அவர் அதை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களிடமே கொடுத்து இருக்கிறார். சிறப்பு விசாரணை குழு இதில் ஆதாரங்களை அழித்தது தற்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

என்ன விசாரணை
சிறப்பு விசாரணை குழுவும், ராஜீவ் குமாரும் தவறான விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதேபோல் இதில் மூத்த போலீஸ் அதிகாரிகளும் ஆதாரத்தை அழிக்க முயன்று இருக்கிறார்கள். விசாரணை அதிகாரிகள் பலர் இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதனால் இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

என்ன கட்டுப்பாடு
கொல்கத்தா போலீஸ் யாரோ சொல்லித்தான் இப்படி செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகளை போலீஸ் மிக மோசமாக நடத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் அரசியலமைப்பு குழி தோண்டி புதைக்கப்பட்டு இருக்கிறது, என்று சிபிஐ தனது பத்திரத்தில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications