டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மமதா vs சிபிஐ.. எதிர்க்கட்சிகள் இன்று அவசர ஆலோசனை.. நாடு முழுக்க போராட திட்டம்!

மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு இதான் காரணம்- வீடியோ

    டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

    நேற்று சிபிஐ அதிகாரிகள், கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை கைது செய்ய வந்தனர். ஆனால் மமதாவின் உத்தரவின் பேரில் கடைசியில் கொல்கத்தா போலீஸ், சிபிஐ அதிகாரிகளை கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார்.

    சேர்ந்தனர்

    சேர்ந்தனர்

    மமதா பானர்ஜிக்கு ஒன்று என்றவுடன் தற்போது எதிர்க்கட்சிகள் பல அவருக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறது. ஏற்கனவே மெகா லோக்சபா தேர்தல் கூட்டணி காரணமாக, எதிர்க்கட்சிகள் பல நண்பர்களாகி உள்ளனர். தற்போது இந்த மமதாவின் போராட்டம் எதிர்கட்சியினரை மேலும் இணைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

    யார் எல்லாம் ஆதரவு

    யார் எல்லாம் ஆதரவு

    பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு வரிசையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

    இன்று சந்திப்பு

    இன்று சந்திப்பு

    இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார். மாலை 4 மணி அளவில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

    முடிவு எடுக்க வாய்ப்பு

    முடிவு எடுக்க வாய்ப்பு

    இந்தியா முழுக்க போராட்டத்தை கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த போராட்டம் தொடர்பாக மமதாவுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகள் எல்லாம் போராட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இது தொடர்பான முடிவு இன்று மாலை எடுக்கப்படும். இதனால் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Andhra Pradesh CM&TDP Chief N Chandrababu Naidu on CBI issue in West Bengal: We will hold discussions with opposition party leaders in Delhi today & draft an action plan on a nation-wide movement. TDP MPs will strongly protest along with other opposition leaders today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X