ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தால் இந்தி தேர்வு எழுத முடியலயா..? சிபிஎஸ்சி கொடுத்த ஸ்பெஷல் ஆஃபர்!
டெல்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை (மார்ச் 15) நடைபெற உள்ள இந்தி தேர்வில் கலந்து கொள்ள முடியாத சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சில பகுதிகளில் மார்ச் 15ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தும் முடிவை எடுத்துள்ளதாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.

எனவே, மார்ச் 15-ஆம் தேதி நடைபெறும் இந்தி தேர்வை எழுத முடியாத சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்கள், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு தேர்வுகளின்போது இத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என அவர் அறிவித்துள்ளார்.
CBSE தேர்வு கால அட்டவணையின்படி, 12 ஆம் வகுப்பு இந்தி கோர் (302) மற்றும் இந்தி தேர்வு (002) தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி நடத்தப்படுகின்றன. 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடையும்.
இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மார்ச் 15 அன்று தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மாற்றுத் தேர்வு தேதியை வழங்க CBSE முடிவு செய்துள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் காரணமாக மார்ச் 15 அன்று தேர்வெழுத சிரமப்படும் மாணவர்கள் அந்த நாளில் தேர்வைத் தவிர்க்கலாம்.
தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான தேர்வுகளைத் தவறவிடும் மாணவர்களுடன், பின்னர் ஒரு சிறப்புத் தேர்வு எழுத CBSE அனுமதிக்கும். நாளை தேர்வு எழுதாத மாணவர்கள் சிறப்புத் தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த கூடுதல் விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பிளஸ்-2 துணைத்தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்; ஜூன் 4 வரை பதிவு செய்யலாம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications