நள்ளிரவில் தடுப்புகள் அமைத்த போலீஸ்.. காவலரை காற்றில் பறக்க விட்ட கார்.. நெஞ்சை பதற வைத்த வீடியோ
டெல்லி: டெல்லியில் சாலையோரம் கண்காணிப்பில் இருந்த காவலர் மீது அசுர வேகத்தில் வந்த கார் தடுப்புகளோடு சேர்த்து வைத்து பயங்கரமாக மோதியது. இதில் காவலர் தூக்கி வீசப்பட்டார். நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
பொதுவாக டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவில் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனை செய்வது வழக்கம். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் ஒரு முக்கியமான இடத்தில் போலீசார் சாலை தடுப்புகள் அமைத்து சோதனை நடத்துவார்கள்.

வழக்கமான போக்குவரத்து சோதனை கிடையாது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், பழைய குற்றவாளிகள், குற்ற வழக்கில் சிக்காமல் தப்பி ஓடியவர்கள், திருடர்கள், சந்தேகத்திற்கு உரியவர்கள், திருட்டு வாகனத்தை ஓட்டுவோர் ஆகியோரை போலீசார் சோதனையின் போது பிடித்து விடுவார்கள்.
அதேநேரம் இரவு நேரத்தை பொறுத்தவரை, இந்த சோதனையை குற்றப்பிரிவு போலீசார் தான் பெரும்பாலும் சோதனை நடத்துவார்கள். அப்படி சோதனை நடத்தும் போலீசார் மீது சிலர் வன்மம் வைத்து தாக்கும் சம்பவங்கள் நடப்பது உண்டு. விபத்து போல் தெரிய வேண்டும் என்று நினைத்து வாகனத்தை வேகமாக இயக்கி மோதுவதும் உண்டு. சிலர் குடிபோதையில் அசுர வேகத்தில் தடுப்புகளை கவனிக்காமல் போலீசார் மீதே மோதுவதும் உண்டு.. அப்படியான ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் கடந்த அக்டோபர் 24ம் தேதி நள்ளிரவு தடுப்புகள் அமைந்து நின்றிருந்த போலீஸ்காரர் மீது அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவலர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
#WATCH | CCTV footage shows a Delhi Police personnel hit by an SUV and thrown into the air in the Connaught Place area
— ANI (@ANI) October 27, 2023
The incident happened on the intervening night of 24th-25th October. Police detained the car driver and action was taken against him.
(Video source: Delhi… pic.twitter.com/5lMAD0It7g
இதனிடையே டெல்லி போலீஸ்காரர் மீது அசுர வேகத்தில் தடுப்பில் வைத்து மோதிய காரின் டிரைவரை கண்காணிப்பில் கேமரா காட்சிகளை வைத்து கண்டுபிடித்தனர்.. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீஸ்காரர் மீது பயங்கரமாக கார் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.குறிப்பிட்ட டிரைவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தாரா அல்லது குடிபோதையில் இருந்தாரா என்பதை வெளியிடவேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் கூறினார். இன்னொரு நெட்டிசனோ, டிரைவர் வேகமாக ஓட்டியது தவறு.. அவர் தப்பு செய்தது அப்பட்டமாக தெரிகிறது. எனினும் திடீரென்று தடுப்புகளைப் போட்டு நடுரோட்டில் நின்றது காவல்துறையின் தவறு என்று கூறினார்.












Click it and Unblock the Notifications