Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியை அதிர வைத்த சம்பவம்.. மர்ம பொருள் எப்படி வெடித்தது? வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே மர்ம பொருள் இன்று காலை 7.50 மணியளவில் வெடித்தது. டெல்லியை அதிரவைத்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் மர்ம பொருள் வெடித்த அடுத்த நொடியிலேயே அந்த சிசிடிவி கேமராவும் அதிர்வுகளில் உடைந்து நொறுங்கியது.

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சோதனைக்கு பிறகு இந்த மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளி என்று தெரியவந்தாலும் தொடர்ச்சியாக விடுக்கப்படும் இத்தகைய மிரட்டல்கள் விமான பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இன்று காலை 7.50 மணியளவில் பயங்கர சத்ததத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

delhi blast police

டெல்லி ரோகினி அருகே உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மர்ம பொருள் வெடித்தது. பள்ளிக்கு மிக அருகே பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால், சுற்றுவட்டார பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். மர்ம பொருள் வெடித்ததும் வெள்ளை நிற புகை சூழ்ந்தது. பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு மிக அருகில் இது நடந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில கார்களும் சேதம் ஆகின.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்விடத்திற்கு உடனடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், என்.எஸ்.ஜி படையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர். வெடித்தது என்ன மாதிரியான பொருள்? வெடிகுண்டா? எனக் கண்டறிய அங்கிருந்து மாதிரிகளை எடுத்து சென்று தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த ஆய்வுகளின் முடிவுக்கு பிறகே பிரசாந்த் விஹார் பகுதியில் வெடித்தது வெடிகுண்டா அல்லது எந்த மாதிரியான பொருள் என்று தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர். எனினும், நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே, மர்ம பொருள் வெடிக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சியில், சிஆர்பிஎப் பள்ளி சுற்றுச்சுவர் அருகே திடீரென ஒரு பொருள் வெடித்து சிதறுகிறது.

சிஆர்பிஎப் பள்ளி சுற்றுச்சுவருக்கு எதிர்த்திசையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தான் இந்த வீடியோ பதிவாகியிருந்தது. மர்ம பொருள் வெடித்து சிதறியதும் அந்த கண்காணிப்பு கேமராவும் அதிர்வில் உடைந்து நொறுங்கியது. சிசிடிவி காட்சியில், மர்ம பொருள் வெடித்த அடுத்த நொடியே சிசிடிவி கேமராவும் உடைந்து விழுகின்றது போல் பதிவாகியுள்ளது.

பண்டிகை காலம் என்பதால், டெல்லியில் ஏற்கனவே போலீசார் ஹை அலார்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மர்ம பொருள் வெடித்து இருப்பதால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை மர்ம பொருள் வெடித்த பகுதியில், என்.எஸ்.ஜி கமேண்டோ படையினர் ரோபோட்டிங் இயந்திரத்தை அனுப்பி வேறு ஏதேனும் வெடி பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.


தற்போது குறிப்பிட்ட அந்த இடத்தை என்.எஸ்.ஜி மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துள்ளனர். வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள டெல்லி போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடக்கும் போது, அப்பகுதியில் இருந்தவர்களிடமும் செல்போன் சிக்னல்களை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+