இதுக்கு திமுக என்ன செய்ய போகிறது?.. மாற போகிறதா பள்ளிக்கல்வி பாடத்திட்டம்?.. மத்திய அரசு புதிய குழு
பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது
டெல்லி: பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது... இது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
புதிய கல்வி கொள்கை என்ற விஷயத்தை திமுக அப்போதிருந்தே எதிர்த்து வருகிறது.. இந்த கல்வி கொள்கை தொடர்பாக தமிழகத்திலும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது..
கடந்த காலத்தை போலவே, இப்போதும் ஆளும் கட்சியாக உள்ள திமுக, அந்த கல்வி கொள்கையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தே வருகிறது.

அரசு
கடந்த மே மாதம், புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கருத்தை கேட்க மறுப்பதால், தமிழகம் சார்பில் அதில் யாருமே கலந்து கொள்ளவில்லை.. அந்த கூட்டமும் புறக்கணிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ்
அதாவது, இந்த புதிய கல்வி கொள்கையானது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்றும், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்றும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து காட்டமான கருத்தை கூறியிருந்தார்.. குலக் கல்வி கொள்கையை ஊக்குவிக்கிறதா, திணிக்கிறதா? என்றும் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமைச்சகம்
இந்நிலையில்தான், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான 12 பேர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அமைத்தது. புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் புதிய பாடத்திட்ட குழு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களை கேட்டறிந்து புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. குழந்தை பருவ கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: 16 வருடங்களுக்கு பிறகு உருவாக்கப்படும் புதிய பாடத்திட்டம், புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கும்...

பாடத்திட்டம்
இதை உருவாக்கும் குழுவில் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக நிறுவன வேந்தர் மகேஷ் சந்திர பந்த், தேசிய புத்தக டிரஸ்ட் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவானது, பள்ளிக்கல்வி, தொடக்க குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர் கல்வி, வயதுவந்தோர் கல்விக்கான 4 புதிய தேசிய பாடத்திட்டங்களை உருவாக்கும்...

தேசிய கல்வி கொள்கை
அதேபோல, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கான தொழில்நுட்பத் தளத்தில் பெறப்பட்ட மாநிலப் பாடத்திட்ட கட்டமைப்பிலிருந்து உள்ளீடுகளை இந்த குழு ஈர்க்கும்... இதைதவிர, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டோரிடம் இருந்து கருத்துகளை பெற்று புதிய பாடத்திட்டங்களையும் உருவாக்கும்.. அந்த புதிய பாடத்திட்ட குழுவின் காலம் 3 வருட காலம் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு புதிய பாடத் திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படவுள்ளன.

புதிய கல்வி கொள்கை
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கொந்தளித்து வருகின்றனர்.. மத்திய அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வரக் கூடிய சூழலில் இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலமாக பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கு குழு அமைத்து மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை இது" என்று வெளிப்படையாகவே விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.. அதுமட்டுமல்ல, என்னதான் மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும் அது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகும் என்பதும் நிச்சயமில்லை என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications