2026 குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி! ஒப்புதல் தந்த மத்திய அரசு
டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. பசுமை மின் சக்தி என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி, இந்த ஊர்வலத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் வரும் ஜனவரி 26ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றுவார்.

எப்போதும் குடியரசு தின விழாவில்.. முப்படை அணிவகுப்பு நடைபெறும். மேலும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் ஊர்திகள் கூட இதில் கலந்து கொள்ளும். இதற்கிடையே 2026 குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்கத் தமிழ்நாடு அலங்கார உறுதிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி நடக்கும் 77வது குடியரசு தின கொண்டாட்டத்தின்போது தமிழக அரசின் ஊர்தி பங்கேற்பது உறுதியாகியுள்ளது. பசுமை மின் சக்தி என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்கிறது. இதற்குத் தேவையான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
எல்லா ஆண்டுகளிலும் அனைத்து மாநில ஊர்திகளுக்கும் அனுமதி கிடைக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 2024ல் குடைஓலை முறை குறித்து அலங்கார ஊர்திக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்தாண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது இப்போது பேசுபொருளானது. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இதை விமர்சித்திருந்தனர்..
இந்தச் சூழலில் தான் 77வது குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அலங்கார உறுதி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமை மின் சக்தி என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இதில் பங்கேற்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications