வெறும் 27 ரூபாய் "பாரத் ஆட்டா".. அதைவிடுங்க, தீபாவளி சர்ப்ரைஸ் தருதா மத்திய அரசு.. விவசாயிகள் குஷி
சென்னை: விவசாயிகள் உதவித்தொகைக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை கொண்டு, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இன்றும்கூட, 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையையை மத்திய அரசு துவக்கி வைத்துள்ளது.

கோதுமை மாவு: அதன்படி, கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும்.. 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும். இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தியும் விரைவில் வெளியாகு போகிறதாம்.
அதாவது, நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பலன்பெறும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதுதான், பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமாகும்.
தவணை பணம்: இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
தற்போது, பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 15வது தவணையை பெற 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.. எனவே, வரும் நவம்பர் 27ம் தேதி, பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த 15வது தவணையை, துவக்கி வைக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.. இதனால், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான விவசாயிகள் பலன்பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
ஒருவேளை, PM கிசானின் 15வது தவணை வரவு வைக்கப்படவில்லை என்றால், pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்குள் பயனாளிகள் சென்று, தவணை நிலையை சரிபார்த்து கொள்ளலாம்.
அதிகாரிகள்: இது தவிர உங்களின் பலன்களின் நிலையை அறிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர்களின் மொபைல் எண்களுக்கும் அழைக்கலாம். உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு தவணை தோன்றுவதற்கு 2-3 நாட்கள் ஆகும் என்பதால், மேலே குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்கு பிறகு, நிலையை சரிபார்க்கலாம்.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்த இன்னொரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அதாவது, விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், பிஎம் கிசான் தொகையை, 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது..
காரணம், பணவீக்கமும், விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிஎம் கிசான் திட்டத்தின் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகிறார்கள். அதனால்தான், மத்திய அரசும் இதை பரிசீலித்திருப்பதாக தெரிகிறது.

தீபாவளி பரிசு: அந்தவகையில், இப்போதுள்ள 6 ஆயிரத்தை சேர்த்து, மொத்தம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. தீபாவளிக்கு முன்னதாகவே 15வது தவணை வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், தவணை தொகையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுவது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை இது கூட்டிவருகிறது.












Click it and Unblock the Notifications