சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியா புது ரூட்.. எல்லையில் 44 சாலைகளை அமைக்க திட்டம்
டெல்லி: இந்திய, சீன எல்லையில் 21,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 44 சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தானை போல.. மற்றொரு நாடான சீனாவும் இந்திய எல்லைப் பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இரு நாடுகளின் தொடர் தொல்லைகள், தாக்குதல் ஆகியவற்றை மனதில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாட்டின் வடகிழக்கு, வடமேற்கு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதற்காக, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித்துறை தயாரித்துள்ள திட்ட அறிக்கை அண்மையில் வெளியானது.
அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் தொடங்கி அருணாச்சலபிரதேசம் வரை இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 44 சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications