தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17ஆம் தேதி நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் சமீபத்தில் அறிவித்தார். விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, சொட்டு மருந்து போடப்படும் என்று அவர் கூறினார்.
இப்பணி, 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, நாடு ஆவலுடன் எதிர்பார்த்த கொரோனா தடுப்பூசி போடும் பணி, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications