அரசு ஊழியர்களுக்கு ஏறுது சம்பளம்.. விரைவில் வருதா ஊதிய உயர்வு? சம்பள கமிஷன் எப்போது? எகிறும் ஆர்வம்
டெல்லி: 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.. எனினும், இந்த நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.
கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016ல் அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
மத்திய அரசு: 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசும் நம்பிக்கை தெரிவித்தவாறே இருந்தது.

ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது, 8வது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்தது.
விளக்கம்: 8-வது மத்திய ஊதியக்குழுவை 2026 ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தும் வகையில், உரிய நேரத்தில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய அரசு முன்மொழிகிறதா என்று நிதித்துறை செயலாளர் டி.வி. சோம்நாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.. இதற்கு பதிலளித்த அவர், இப்போதைக்கு 8 வது ஊதியக்கமிஷன் அமைப்பது பற்றிய எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறியிருந்தார். மத்திய அரசு தரப்பில் இவ்வாறு சொல்லப்பட்டாலும், அரசின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.
காரணம், ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாகும்..
ஊதியக்குழு: அதுமட்டுமல்ல, கடந்த 2013 எம்பி தேர்தலுக்கு முன்பு, 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதுபோலவே, விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதனால், இந்த தேர்தலையும் கணக்கிட்டு 8வது ஊதியக்குழு அமைத்தால், அது சாதகமான பலன்களை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதமாக விலைப்படி உயர்வு தரப்பட்டது.. இதனையடுத்து அரசு ஊழியர்கள் 46 சதவீதம் அகவிலைபடியாக பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 8வது ஊதிய குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுத்தேர்தலுக்கு முன்பே இதுகுறித்த அறிவிப்பு வரக்கூடும் என்று ஊழியர் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.
எதிர்பார்ப்பு: 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது.. 7வது ஊதியக்குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்குமான அகவிலைப்படியானது, 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த திருத்தப்பட்ட விகிதம் 2023 ஜூலை 1 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications