பணியிடங்களில் ஊழியர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி..சிறப்பு முகாம் நடத்த மத்திய அரசு உத்தரவு
பணியிடங்களில் அனைவருக்கும் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த சிறப்பு முகாம்களில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசாக செலுத்த வகை செய்ய வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஆனவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு கோவிட் தடுப்பூசி அமுத பெருவிழா என்ற திட்டத்தை ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரையில் 75 நாள் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

'ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்' என்ற பெயரில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடுவதையொட்டி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் நலன் துறை பிறப்பித்துள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசாக செலுத்த வகை செய்ய வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி முதல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதம் ஆகும். சுமார் 4 கோடி பேர் ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லை.
மார்ச் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.
8 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications