அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் விதிகள் அதிரடியாக மாற்றியமைப்பு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது. 2021-ம் ஆண்டின், மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2003-ம் ஆண்டின் டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்றும், அதேநேரம் ரயில்வே ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கடந்த ஆண்டு திருத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.

ஒரு மத்திய அரசு ஊழியர் முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதேநேரம் கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இஐருந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் இருந்தது. புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் படி, மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை மத்திய அரசு தற்போது மாற்றி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது. இந்த ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முக்கிய திருத்தங்களை செய்து அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது. இந்த விதிகள் 2021-ம் ஆண்டின், மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2003-ம் ஆண்டின் டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.
ஆனால், ரயில்வே ஊழியர்கள், தற்செயல் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது "பொதுத்துறை நிறுவனங்களில் தவறான நடத்தைக்காக பணிநீக்கமோ அல்லது ஆட்குறைப்போ செய்யப்படும் ஊழியர்கள், தங்களது ஓய்வுகால பலன்களை இழக்க வேண்டி இருக்கும். எனினும் அவர்களது பணிநீக்கம் அல்லது ஆட்குறைப்பு, அவர்களது பொதுத்துறை நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, பணிநீக்கம் செய்யப்பட்டாலும், ஓய்வுகால பலன்கள் பறிபோகாது என்ற நிலை இருந்தது. மேலும், திருத்தப்பட்ட விதிமுறைகளில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதும், நீடிப்பதும், சம்பந்தப்பட்டவரின் எதிர்கால நன்னடத்தையை பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் கருணைப்படி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications