மிடில் கிளாஸ் மக்களுக்கு.. இப்படி ஒரு பிரச்சனையா! இனி உஷாராக இருக்க வேண்டியது நீங்கள்தான்!
டெல்லி: இந்தியாவில் கார்ப்ரேட்டுகளுக்கு விதிக்கப்படும் வரியை விட, மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர மக்களுக்கு விதிக்கப்படும் வரிதான் அதிகமாக இருக்கிறது. எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை சிக்கலை சந்திக்கக்கூடும்.
சுருக்கமாக சொல்வதெனில் நம்மை போன்ற சாதாரண மக்கள் அரசுக்கு செலுத்தும் வரியை விட, பெரிய கொழுத்த கார்ப்ரேட்டுகள் குறைவாகவே வரியை செலுத்துகின்றனர்.

இருக்கிறவன் கிட்ட இருந்து புடுங்கி இல்லாதவனுக்கு கொடுப்பதுதான் சமத்துவம். ஆனால் கடந்த 2023-2024 நிதியாண்டில் நம்மை மாதிரி இல்லாத மக்கள் ரூ.12.01 லட்சம் கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியிருக்கிறார்கள். அதேபோல, நாட்டில் 40% சொத்துக்களை தங்கள் கைகளில் வைத்திருக்கும் வெறும் 1% கார்ப்ரேட்டுகள், வரியாக ரூ.11.32 லட்சம் கோடியை மட்டுமே செலுத்தியிருக்கிறார்கள்.
மிடில் கிளாஸ் மக்கள் - ரூ.12.01 லட்சம் கோடி
கார்ப்ரேட்கள் - ரூ.11.31 லட்சம் கோடி
ஆக கோடி கோடியாக சம்பாதிப்பவர்களை விட, ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்களும், நானும்தான் வரியை அதிகம் செலுத்துகிறோம். சரிங்க இதுல என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?
அடுத்த ஆண்டுக்குள் வருமான வரியை 14.4 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதாவது இப்போதும் நாம் செலுத்திக்கொண்டிருக்கும் வரியை விட கூடுதலாக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு, நம்மிடமிருந்து வாங்க திட்டமிட்டிருக்கிறது. இதுதான் பிரச்சனை.
பிப்.3ம் தேதி மத்திய அரசின் வருவாய் மற்றும் நிதித்துறை செயலாளர் 'துஹின் காந்தா பாண்டே', வருமான வரி வசூலை அதிகரிப்பது குறித்து பேசியிருக்கிறார். 1 டிரில்லியன் எனும் இலக்கை நாங்கள் விட்டுக்கொடுத்தாவது வசூலில் 14.4% எனும் இலக்கை கல்லா கட்டிவிடுவோம் என்று கூறியுள்ளார்.
வரி கட்டுற அளவுக்கு சம்பாத்தியம் இருந்தா வரியை கட்டப்போகிறார்கள். அவ்வளவுதானே, என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் மக்களே விஷயம் அது இல்லை. கொஞ்சமாக சம்பாதிக்கிற நாம நிறைய வரி கட்டுறோம். கோடி கோடியா சம்பாதிக்கிறவங்க ஏன் நம்மை விட அதிக வரியை கட்டவில்லை? என்பதுதன் இப்போதைய கேள்வி.
இந்தியாவின் மக்கள் தொகை ஏறத்தாழ 140 கோடி. இதில் மிடில் கிளாஸ் (நீங்களும் நானும்) மக்களின் எண்ணிக்கை 43.2 கோடி. அதாவது 32 சதவிகிதம். இதுவே கார்ப்ரேட் பணக்காரர்களின் எண்ணிக்கை வெறும் 14 கோடி. அதாவது 1 சதவிகிதம்.
மிடில் கிளாஸ் மக்கள் - 43.2 கோடி (32%)
கார்ப்ரேட் பணக்காரர்கள் - 14 கோடி (1%)
மிடில் கிளாஸ் மக்களிடம் என்ன இருக்கும்? சொந்தமாக ஒரு வீடு. அதிகபட்சமாக ஒரே ஒரு கார் இருக்கும். ஆனால், 14 கோடி கார்ப்பரேட் பணக்காரர்களிடம் இந்தியாவின் மொத்த சொத்தில் 40% இருக்கிறது. சென்னையில் மிக உயரமாக இருக்கும் பல பில்டிங்குகள் இவர்களுடையதுதான்.
அப்படியெனில் இவர்களிடமிருந்துதானே அதிக வரியை பிடுங்கியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. இனியும் அப்படி நடக்குமா என தெரியாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கார்பரேட்டுகளுக்காக சேர்த்து இனி நாம்தான் வரியை கட்ட வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை துஹின் காந்தா பாண்டே உறுதி செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆகவே வரும் நாட்களில் மிடில் கிளாஸ் மக்கள் கவனமாக பிழைத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வார்னிங் செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications