இனி ஒரு சொட்டு சிந்து நீர் கூட பாகிஸ்தானுக்கு போகாது.. பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுக்கும் இந்தியா
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. இதற்கிடையே சிந்து நதி நீரை இந்தியாவிலேயே பயன்படுத்தும் வகையில் ஒரு பிரம்மாண்டத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் வடமாநிலங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் போகும்.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடத்தி, தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
அதன் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மோதல் முடிந்த பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீண்டும் செயல்படுத்தும் என்றே பாகிஸ்தான் நினைத்தது. ஆனால், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது எனச் சொல்லிய மத்திய அரசு, தீவிரவாதத்தைத் தடுக்க பாகிஸ்தான் நிஜமாகவே நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
அப்போது முதலே சிந்து நதிகளில் இந்தியா போட்டுள்ள திட்டம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே வட மாநிலங்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிந்து நதி அமைப்பில் பெரும் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறதாகத் தகல் வெளியாகியுள்ளது. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இத்திட்டத்தை முடிக்கவும் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
14 கிமீ சுரங்கம்
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், சிந்து நதிகளை இணைக்க 14 கி.மீ நீளச் சுரங்கப்பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த 14 கிமீ சுரங்கப் பாதையின் மூலம் சிந்து நதியும் பியாஸ் நதியும் இணைக்கப்படும். எல் & டி நிறுவனம் இதற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை அடுத்த ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல வட மாநிலங்களுக்குச் சிந்து நதி நீரைக் கொண்டு செல்லும் 113 கி.மீ கால்வாய் அமைக்கும் பணி குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் முன்னிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய நீர் பங்கீட்டு ஒப்பந்தம் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம். ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து.
மத்திய அரசு
அதன் பிறகு, சிந்து நதி நீரை இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்வதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்காக "மாநிலங்களுக்கிடையேயான சிந்து நீர் பரிமாற்றத் திட்டம்" என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டத் திட்ட உருவாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உயர்மட்டத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை நேரடியாகவே கண்காணிக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தின் மிகவும் சவாலான பகுதி இந்த 14 கி.மீ சுரங்கப்பாதை கட்டுமானம் தான் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு சுரங்கப்பாதையை அமைக்க, மலைப் பாறைகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். பாறைகள் பலவீனமாக இருந்தால், குழாய்கள் வழியாகச் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இந்த திட்ட அறிக்கை கிடைத்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
திட்டம் என்ன
விரைவாகவும் அதேநேரம் பாதுகாப்பாகவும் இதை அமைக்கச் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் மற்றும் ராக் ஷீல்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உஜ் பல்நோக்கு திட்டத்துடனும் இந்தச் சுரங்கப்பாதை இணைக்கப்படும். இது ராவியின் துணை நதியான உஜ் நதியில் இருந்து பியாஸ் படுகைக்கு நீரை மாற்ற உதவும்.
இந்த சுரங்கப்பாதை நிறைவடைந்தவுடன், ரவி- பியாஸ்- சட்லஜ் அமைப்பு சிந்து படுகையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவுக்கு அதிகபட்ச நீர் கிடைக்கும். இதன் கட்டுமானம் முடிய மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என்றும், 2028க்குள் கட்டுமானத்தை முடிக்க முடியுமா என்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வகிரது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் ₹4,000-₹5,000 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நீர்ப் பஞ்சம் இருக்காது
கட்டுமானம் விரைவாக முடிக்கப்படுவதை உறுதி செய்ய, சுரங்கப்பாதை கட்டுமானம் தனித்தனிப் பிரிவுகளாக மேற்கொள்ளப்படுமாம்.. ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் உள்ள இந்திரா காந்தி கால்வாய்க்கு நீரைத் திருப்பி விடுவதன் மூலம், நீர்ப்பாசனத் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களும் பயனடையும். வட மாநிலங்களில் நிலவும் நீர் பஞ்சத்தை தீர்க்கும் வகையிலும் இந்த திட்டம் இருக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications