ரூ.3887 கோடி மதிப்பீட்டில் 15 இலகுரக ஹெலிகாப்டர்கள்! எச்ஏஎல் நிறுவனத்திடம் இந்தியா வாங்குகிறது!
டெல்லி: பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து ரூ.3887 கோடி மதிப்பீட்டில் 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா தொடர்ந்து ராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் செயல்பாடுகளால் இந்தியாவின் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகி வருகிறது.
இந்தியாவின் பெரும்பாலான ராணுவ தளவாடங்களை இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து பெற்று வருகிறது. இதில் போர் விமானங்களும் அடங்கும்.

பிரதமர் மோடி ஆலோசனை
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது உள்நாட்டு உற்பத்தி மூலம் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராணுவ தளவாடங்கள் குறித்த விஷயங்களும் ஆராயப்பட்டது.

15 இலகுரக ஹெலிகாப்டர்கள்
இதையடுத்து ரூ.3,887 கோடி மதிப்பீட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனும் எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,887 கோடி மதிப்பீட்டில் 15 புதிய இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் உள்ள ஆத்மநிர்பார் பாரத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் என மத்திய அரசு நம்புகிறது.

எதற்காக இந்த முடிவு
இந்த 15 ஹெலிகாப்டர்களில் 10 இந்திய விமானப்படைக்கும், 5 ராணுவத்துக்கும் வழங்கப்பட உள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு போர் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணி என்ன
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛இலகுரக போர் ஹெலிகாப்டர்கர் பாதுகாப்பு பிரிவில் நல்ல திறனுடன் செயல்படுகிறது. உரிய வேகம், அதிக செயல்திறனுடன் தேடுதல் பணி, மீட்பு பணி, போர் ஆகியவற்றுக்கு பயன்படுத்த முடியும். பதுங்கு குழிகளையும் தகர்க்க பயன்படுத்தலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications