மலையாள டிவி சேனல் Mediaone ஒளிபரப்பை முடக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு 2 நாட்கள் ஹைகோர்ட் தடை!
டெல்லி: கேரளாவை சேர்ந்த முன்னணி மலையாள டிவி சேனல்களில் ஒன்றான Mediaone ஒளிபரப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு முடக்கிய நடவடிக்கைக்கு கேரளா உயர்நீதிமன்றம் 2 நாட்கள் தடை விதித்துள்ளது.
டிவி சேனல்களைப் பொறுத்தவரை ஒளிபரப்புவதற்கான உரிமம் பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு தொடர்பான தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த தடை இல்லாத சான்றிதழ் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியதாகும்.

2020-ல் முடக்கம்
கேரளாவின் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான Mediaone, ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் சார்பாக Madhyamam Broadcasting Limited நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒருதலைபட்சமாக ஒளிபரப்பு செய்த புகாரின் பேரில் Mediaone டிவி சேனல் ஒளிபரப்பை மத்திய அரசு 48 மணிநேரம் முடக்கி இருந்தது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

2-வது முறையாக தடை
இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் Mediaone டிவி சேனல் ஒளிபரப்பை மத்திய அரசு மீண்டும் முடக்கி உள்ளது. இது தொடர்பாக Mediaone டிவியின் செய்தி ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி டிவி சேனல் ஒளிபரப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது.எங்கள் Mediaone டிவி சேனலுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஆகையால் எங்களது ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இந்த தடைக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த தடை தற்காலிகாமனதாகவே இருக்கும். நிச்சயம் நீதியை நிலைநாட்டி மீண்டும் மக்களுக்கு ஒளிபரப்பு சேவையை தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு பிரமோத் ராமன் தெரிவித்துள்ளார்.

தடைக்கு எதிர்ப்பு
Mediaone டிவி சேனலுக்கு வழங்கப்பட்ட ஒளிபரப்பு உரிமம் காலாவதியாகவில்லை. இந்த சேனலில் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய அரசு திடீரென தடை விதித்திருக்கிறது என்கின்றன அந்த சேனல் வட்டாரங்கள். மத்திய அரசின் இந்த திடீர் தடைவிதிப்புக்கு கேரளா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது; எதற்காக Mediaone டிவி சேனல் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றார்.

கேரளா ஹைகோர்ட் உத்தரவு
இதனிடையே இந்த தடைக்கு எதிராக Mediaone டிவி சேனல் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், தங்களது டிவி சேனல் எந்த ஒரு தேசவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தெரிவித்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகரேஷ், Mediaone டிவி சேனல் ஒளிபரப்பை நிறுத்த கூடாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு 2 நாட்கள் தடை விதிப்பதாக தெரிவித்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications