Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர், மகாராஷ்டிரா மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி! சென்னை மெட்ரோவுக்கு பணம் தரவில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்படுவதால், இதற்கு நிதி தர முடியாது என்று கூறி கைகழுவிய மத்திய அரசு, தற்போது பெங்களூர் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, சென்னை, ஐதராபாத் போன்ற நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.

Chennai Bangalore Central Govt

மெட்ரோ ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசல் இன்றி நகரங்களில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடியும் என்பதால் நகர்புற மக்களிடையே மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் 2- ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்த தமிழக அரசு முன்மொழிந்தது.


நிதி ஒதுக்க மறுப்பு: 118.9 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மெட்ரோ ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது தயாநிதி மாறன் எம்பி இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டோகன் சாஹு, இந்தத் திட்டத்திற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாநிலத் துறை திட்டம்: இது தொடர்பாக அவர் கூறுகையில், அதிக செலவில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்தது. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கிமீ வழித்தடத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது. சென்னை மெட்ரோ கட்டம் -2 திட்டத்துக்கு 63,246 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது,​​ சென்னை மெட்ரோ கட்டம் -2 திட்டம் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான செலவினம் தற்போது மாநில அரசால் ஏற்கப்படுகிறது, என்றார்.


மகாராஷ்டிரா, பெங்களூருக்கு ஒப்புதல்: முதல் கட்ட திட்டத்திற்கு மட்டுமே நாங்கள் நிதி கொடுத்தோம். இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்று அறிவித்து இருந்தார். தமிழக அரசின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என கைவிரித்த மத்திய அரசு தற்போது, பெங்களூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, புனே ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த ஒப்புதல் கவனம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் இந்த இரு பெரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இருப்பது அங்குள்ள ரியல் எஸ்டேட் துறை வளரவும், இரு நகரங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெங்களுர் மெட்ரோ வழித்தடம்: பெங்களூரில் 3-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் 15,611 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஜேபி நகர் டூ கெம்பபுரா மற்றும் ஹோசஹல்லி டூ கடபாகெரே வரையும் என இரண்டு வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே ஒருங்கிணைந்த மெட்ரோ திட்டம் என்பது 12,200 கோடி ரூபாய் மதிப்பிட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. புனே மெட்ரோ என்பது ஸ்வரக்கேட் டூ கத்ராஜ் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2,945 கோடி ரூபாய் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+