சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் இனி கிடையாது.. மத்திய அரசு
டெல்லி: அத்தியாவசிய கனிமங்களுக்கான சுரங்கத் திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டங்கள் இனி நடத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய கனிமங்களுக்கான சுரங்கத் திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டங்கள் இனி நடத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் போது, அப்பகுதியினரின் கருத்து கேட்பு நடைபெறும். மத்திய அரசின் புதிய விதிகளின்படி அணுசக்தி, பாதுகாப்புக்குத் தேவையான கனிமங்கள் குறித்த திட்டங்களுக்கு கருத்து கேட்பு இருக்காது.
யுரேனியம், தோரியம், லித்தியம், கோபால்ட் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் பாதுகாப்புக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, கனிமங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய விதியால், கருத்து கேட்பு கூட்டம் நடைபெறாமலே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படும்.
அதாவது, புதிய விதிகளின்படி அணுசக்தி, பாதுகாப்புக்குத் தேவையான கனிமங்கள் குறித்த திட்டங்களுக்கு கருத்து கேட்பு இருக்காது என்பதே இதன் சாரம்சமாகும். மத்திய அரசின் இந்த புதிய விதிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் புதிய விதி தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறுகையில், "மத்திய அரசின் இந்த புதிய விதி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை திருத்தம் செய்யும் போதே இந்த விதியை வைத்து இருந்தார்கள். அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தி வைத்தனர். ஆனால் தற்போது அறிவித்திருப்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அரிய வகை கனிமங்கள் தமிழக கடற்கரையில் கிடைக்கின்றன. எனவே, தமிழக அரசு இந்த விதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கோரிக்கையை வைக்கிறோம். மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மக்களிடம் கருத்து கேட்டால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன என்று சொல்வார்கள்.
அதெல்லாம் தேவையில்லை. 'நாங்கள் நினைப்பதுதான் சட்டம், நாங்கள் நினைப்பதுதான் விதிகள்' என்று சொல்லும் மனப்பான்மையைத்தான் இது காட்டுகிறது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தேச பாதுகாப்பு என்பது மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதை அரசு தனியாக செய்ய முடியாது. மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த திட்டத்தை கொண்டு வர முயன்றாலும், அது தேசத்திற்கு எதிராகவே போய் முடியும். இறையாண்மை மக்களிடம் தான் உள்ளது" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications