டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லைசென்ஸை புதுப்பிக்கத் தேவையான காலக்கெடு நான்காவது முறையாக நீட்டிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்கக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுத்தால் பேரழிவுதான்.. ஜோ பிடன் வார்னிங் கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுத்தால் பேரழிவுதான்.. ஜோ பிடன் வார்னிங்

இறுதி தேதி நீட்டிப்பு

இறுதி தேதி நீட்டிப்பு

மேலும், இதனால் லைசென்ஸ் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு இந்த ஆவணங்களைப் புதுப்பிக்கும் இறுதி தேதி நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மார்ச் வரை பயன்படுத்தலாம்

மார்ச் வரை பயன்படுத்தலாம்

தன்படி தற்போது காலாவதியாகும் லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நான்காவது முறை

நான்காவது முறை

மத்திய அரசு ஏற்கனவே மார்ச். ஜூன், ஆகஸ்ட் என மூன்று முறை லைசென்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் தேதியை நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் மூலம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலாவதியான ஆவணங்களை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 காரணம் என்ன

காரணம் என்ன


கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பொதுமக்கள் பெறவும் இது உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

English summary
The Central government has once again extended the validity of all vehicle-related documents in order to avoid crowding and the possible spread of COVID-19. All those driving licences, registration certificates, and permits which were set to expire may now be used till March 31, 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X