டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய விதிகளால் எந்தவொரு தனிநபர் உரிமையும் மீறப்படாது.. வாட்ஸ்அப்-க்கு மத்திய அரசு விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தனியுரிமைக்கான உரிமை உட்பட எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்று வாட்ஸ்-அப்-க்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    India-வில் ஊழியர்களின் பாதுகாப்பு பற்றி அச்சம்.. Twitter நிறுவனம் கவலை!

    பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தலங்களுக்கான புதிய விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

     ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற

    இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்த இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 3 மாத காலம் காலஅவகாசம் வழங்கியது. இந்த காலஅவகாசம் தற்போது முடிந்துள்ளது.

     வாட்ஸ்-அப் வழக்கு

    வாட்ஸ்-அப் வழக்கு

    இதனால் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. பேஸ்புக் நிறுவனம் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தது. ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள வாட்ஸ்-அப் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ' மத்திய அரசின் புதிய விதிமுறை மக்களின் உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். நிறுவனம் ரகசியமாக்கப்பட்ட செய்திகளை அணுக அனுமதிப்பது தனியுரிமை பாதுகாப்புகளை குலைக்கும் 'என்று கூறியது.

    உரிமையை மதிக்கிறோம்

    உரிமையை மதிக்கிறோம்

    இந்த நிலையில் வாட்ஸ்-அப்ப-க்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு விளக்கம் அளித்த்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் கூறியபடி புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தனியுரிமைக்கான உரிமை உட்பட எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மதிக்கிறோம். தனிநபர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதை, அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது என்று கூறியது.

    தேசப் பாதுகாப்பு முக்கியம்

    தேசப் பாதுகாப்பு முக்கியம்

    இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்து கூறுகையில், ' புதிய வழிகாட்டு முறைகளில் உள்ள எந்த நடவடிக்கையும், வாட்ஸ்அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது. சாதாரண மக்களின் தனியுரிமையிலும் எந்த பாதகமும் ஏற்படாது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், தேசப் பாதுகாப்பும் அரசின் கடமையாகும்.

    தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை

    தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை

    இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. வாட்ஸ்அப் உட்படபல்வேறு சமூக ஊடக நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், குற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார்? என்பதை வாட்ஸ்-அப் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறைதான் புதிய வழிகாட்டு நெறிமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.

    English summary
    The federal government has explained to whats-up that no fundamental rights, including the right to privacy, have been violated in the new guidelines
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X