எலைட் மக்களின் பார்வை,. இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா! தன்பாலின திருமண விவகாரத்தில் மத்திய அரசு
டெல்லி: தன்பாலின ஈர்ப்பு திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு திட்டவட்ட எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
தன்பாலின ஈர்ப்பு என்பது இயல்பாக இருப்பது தான்.. அது மருத்துவ குறைபாடு இல்லை என்ற விழிப்புணர்வு நமது நாட்டில் குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே தன்பாலின ஈரப்பாளர்களை நாம் பல காலம் அங்கீகரிக்கவில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் தான் தன்பாலின ஈர்ப்பு என்பது தண்டைக்குரிய குற்றம் இல்லை என்றவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
தன்பாலின திருமணம்: இதற்கிடையே தன்பாலின ஈரப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று தனது பதிலைத் தாக்கல் செய்துள்ளது.
அதில் அதன் விவரம்: ''தன்பாலின திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது வெறும் எலைட் மக்களின் பார்வை மட்டுமே.. இந்த திருமணங்களை ஆதரித்து ஒரு புது சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தான் விவாதம் நடத்தி முடிவை எடுக்க வேண்டும். இந்த 'வேறு வகை' திருமணங்களை சமூக மற்றும் மத ரீதியாக ஏற்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்.
எலைட் மக்கள்: புது சமூக நிறுவனத்தை உருவாக்கும் உரிமை உண்டு அல்லது இது தனிநபர் விருப்பம் என்ற அடிப்படையில் இதற்கு உரிமை கோர முடியாது.. இது நிச்சயம் அடிப்படை உரிமை இல்லை.. தனி நபர் விரும்ப உரிமை என்று கூறி தன்பாலின திருமணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமை இல்லை. இது எலைட் மக்களின் பார்வை தான். எனவே, இதை பொதுவான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல் அந்த மனுக்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும்.
கிராமப்புற மக்கள், இரண்டாம் கட்ட நகரத்தில் வாழும் மக்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள் என்று அனைத்திலும் இந்த தன்பாலின திருமணம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் திருமணம் என்பது சட்டப்படியும், மதத்தின் படியும் புனிதமான ஒன்றாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. தன்பாலின திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளித்தால், இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
பாலியல் உறவுக்கான தேர்வு மற்றும் அதில் பிறரின் தலையீடு இல்லாமல் இருக்கும் உரிமை உள்ளிட்டவை ஏற்கனவே திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் தன்பாலின திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது
ஒரே பாலின திருமணத்தைத் தவிர்ப்பது என்பது பாரபட்சமானது இல்லை.. ஏனெனில் அனைத்து மதங்களிலும் திருமணங்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆழமான ஒன்றாக இருக்கிறது. உண்மையில் திருமண் என்பது இந்து சட்டத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஒரு புனிதமாகக் கருதப்படுகிறது. இஸ்லாத்தில் கூட, இது ஒரு ஒப்பந்தம் என்றாலும், இது ஒரு புனிதமான ஒப்பந்தம் என்றும் இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே செல்லுபடியாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications