தேச துரோக சட்டப்பிரிவை நீக்க கோரும் வழக்கு- பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்
டெல்லி: நாடு விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச துரோக சட்டப் பிரிவுகள் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறையில் உள்ளது இந்திய குற்றவியல் சட்டம் 124ஏ. இது நாட்டுக்கு தேசதுரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தேசதுரோக சட்டப் பிரிவு 124ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது; இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எதிர்ப்பு குரல்கள்
நாட்டில் 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகள் எண்ணிக்கை 160% அதிகரிப்பாகும். ஆனால் இந்த வழக்குகளின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 3.3%தான். ஆகையால் தேசதுரோக சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்கிற எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தேசதுரோக சட்டம் நாடு விடுதலைக்குப் பின்னரும் பின்பற்றப்பட்டு வருகிறது. இச்சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது; மக்களின் கருத்து உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது; ஆகையால் தேசதுரோக சட்டப்பிரிவு 124ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி கேள்வி
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்தது. அப்போது 124 ஏ பிரிவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் முன்வைத்திருந்தது. அப்போது, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட இந்த சட்டப் பிரிவு அவசியம்தானா? மத்திய அரசு இந்த பிரிவை இன்னமும் ரத்து செய்யாமல் இருப்பது ஏன்? ஐடி சட்டத்தின் 66ஏ பிரிவு நீக்கப்பட்டது. அதைப் போலவே தேசதுரோக சட்டப் பிரிவும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசதுரோக சட்டப் பிரிவின் கீழான புகார்கள் பெரும்பாலானவை நிரூபிக்கப்படுவதும் இல்லை என கடுமையாக தெரிவித்திருந்தனர். ஆனால் மத்திய அரசு தரப்போ தேசதுரோக சட்டப் பிர்வு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டது.

இன்றும் விசாரணை
இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று இந்த வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications