டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபாவில் திருத்தப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல்- சசிதரூர் எதிர்ப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    முத்தலாக் கூறுவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்த மோடி அரசு

    டெல்லி: லோக்சபாவில் இன்று திருத்தப்பட்ட முத்தலாக் தடை சட்ட வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை நிறைவேற்ற காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இஸ்லாமிய பெண்களை மூன்று முறை தலாக் என்று மட்டும் கூறி விவகாரத்து செய்யும் முறை இருந்து வந்தது. இது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி முத்தலாக் விவகாரத்து முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த பாஜக ஆட்சியில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

    Centre to table New Triple Talaq Bill in LS

    ஆனால் பாஜக அரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் அச்சட்டம் நிறைவேறாமல் இருந்தது. கடந்த 16-வது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததால் அச்சட்ட மசோதாவும் காலாவதியானது.

    முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாகவே தற்போது லோகபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இம் மசோதாவ்வின் வாசகங்கள், அனைத்தும் அவசர சட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடியவையே. அந்த நகலை அப்படியே மசோதாவாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

    இம்மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    English summary
    New Triple Talaq Bill to be Tabled in Lok Sabha on Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X