ChampionsTrophy: வாகை சூடிய இந்தியா- நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்- பிரதமர், முதல்வர் வாழ்த்து!
டெல்லி: துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. 12 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை நமது வீரர்கள் வெளிப்படுத்தி இருந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உற்சாக கொண்டாட்டம்
#WATCH | Chennai: On India winning the #ICCChampionsTrophy final, a cricket fan says, "It is a great victory... I am very happy..." pic.twitter.com/zoBMApEqja
— ANI (@ANI) March 9, 2025
இந்திய அணியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடித் தீர்த்தனர். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்ட திரையில் இறுதிப் போட்டியை ரசித்த ரசிகர்கள், இந்தியாவின் வெற்றியை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
டெல்லியில் கரைபுரண்ட மகிழ்ச்சி வெள்ளம்
#WATCH | Delhi: Fans celebrate as team India lifted the #iccchampionstrophy2025 beating New Zealand.
— ANI (@ANI) March 9, 2025
(Visuals from India Gate) pic.twitter.com/TfSWyN8voc
டெல்லி வீதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்று திரண்டு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடினர்.
மும்பையில் ஆரவார மகிழ்ச்சி
#WATCH | City of Dreams - Mumbai celebrates India's third #ICCChampionsTrophy title pic.twitter.com/UIdb6d2riZ
— ANI (@ANI) March 9, 2025
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொன்டாட்டத்துடன் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர்.
புனே மாநகரமே ஸ்தம்பித்தது
#WATCH | Maharashtra: A large number of team India fans celebrate in Pune after India wins #iccchampionstrophy2025 pic.twitter.com/T27B2SnGbB
— ANI (@ANI) March 9, 2025
மகாராஷ்டிராவின் புனே மாநகரத்தின் வீதிகள் எங்கும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான அணிவகுப்புதான்.. வீதிகள் எங்கும் ரசிகர்களின் உற்சாக பெருவெள்ளம்தான்.
சண்டிகரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
#WATCH | Chandigarh erupts into celebrations after India clinches #ICCChampionsTrophy pic.twitter.com/CaWMI4qQt9
— ANI (@ANI) March 9, 2025
சண்டிகரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications