கிங்கா? கிங் மேக்கரா? மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் சந்திரபாபு நாயுடு.. பிரதமர் வேட்பாளர் யார்?
2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் இந்த அணியில் யார் முன்னிலைபடுத்தப்படுவார் என்று விவாதம் எழுந்துள்ளது.
நேற்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்று கூட கூறலாம். பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல கட்சிகளை சென்று பார்த்தார்.
இந்த கட்சிகள் எல்லாம் சந்திரபாபு நாயுடுவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இந்த மிகப்பெரிய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விதான் எல்லோருக்கும் எழுந்து இருக்கிறது.
[இதுவரை தொட்டதெல்லாம் வெற்றி கூட்டணிதான்.. மோடிக்கு கடும் சவாலாக உருவாகியுள்ள சந்திரபாபு நாயுடு! ]

எந்த கட்சி எல்லாம் சேரும்
பாஜகவிற்கு எதிரான தெலுங்கு தேசம் கட்சி உருவாக்க உள்ள இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, இரண்டு இடதுசாரி கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, முஸ்லீம் லீக், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் அந்தந்த மாநிலங்களில் பெரிய கட்சியாக உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

போட்டி யாருக்கு
ஆனால் இதில் மிகப்பெரிய போட்டி ஒன்று நிலவுகிறது. கொள்கை எல்லாம் ஒத்துபோய் கட்சிகள் இணைந்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் பிரதமர் வேட்பாளர் யாராக இருப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருக்கும் இவர்களுக்கே இந்த பதில் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

நான்கு பேர்
அதே சமயம் அரசியல் தெரிந்தவர்கள், 4 முக்கிய தலைவர்களை இந்த பிரதமர் வேட்பாளர் லிஸ்டில் சொல்கிறார்கள்.
- மமதா பானர்ஜி
- ராகுல் காந்தி
- மாயாவதி
- சந்திரபாபு நாயுடு
ஆகிய நான்கு பேர்தான் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் ஒப்பந்தமும் ஒத்துழைப்பும்தான் கூட்டணிக்கான அஸ்திவாரமாக இருக்கும்.

ராகுல் வருவாரா?
இதில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பாரா என்று பலத்த கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் வேட்பாளர் ரேஸில் உள்ளவர்களில் ராகுல்தான் வயது குறைந்தவர். ஆனால் இவர்தான் இந்த கூட்டணிக்கு முகமாக இருக்க ஆசைப்படுவார் என்பதால், இவர் தேர்தெடுக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் அந்த நால்வரில் ராகுல் தான் அனைத்து மாநிலத்திற்கும் தெரிந்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடு
அதே சமயம் இந்த கூட்டணியில் மூத்தவர் சந்திரபாபு நாயுடுதான். அதேபோல் அனுபவத்திலும் அவர்தான் முதல்வர். மிக முக்கியமாக இந்த கூட்டணியே சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் கிடையாது என்பதால், அவரை கட்சிகள் முன்னிறுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஒரு தென்னிந்தியருக்கு இந்த முறை வாய்ப்பளிக்க இவர்கள் முயல்கிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications