செம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக சந்திரசேகரன்- மத்திய அமைச்சர் ட்வீட்டில் ரஜினிக்கு டேக்
டெல்லி: மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையத்தின் முதல் இயக்குநராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலின் ட்வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் பதவி நீண்டகாலம் நிரப்பப்படாமலே இருந்தது. இந்த பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் நியமனம்
அந்த பதிவில், செம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கையை இது வெளிப்படுத்துகிறது என அதில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இல்லாமல் தமது ட்விட்டர் பதிவை டேக் செய்திருக்கிறார்.

டேக் செய்த அமைச்சர்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்வீட் பதிவை, @narendramodi @AmitShah @CMOTamilNadu ஆகியோருக்கு ட்வீட் செய்திருக்கிறார். அத்துடன் நடிகர் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கமான @rajinikanth-க்கும் ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்துக்கும் டேக்
நடிகர் ரஜினிகாந்துக்கு ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்திருப்பதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. மத்திய- மாநில அரசுகள் தொடர்பான ஒரு பதிவில் நடிகர் ரஜினிகாந்த் எதற்காக டேக் செய்யப்பட வேண்டும் என்பது நெட்டிசன்கள் கேள்வி. தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பதில் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டுவிட்டாரோ? என்பதும் நெட்டிசன்கள் சந்தேகம்.

நெட்டிசன்களிடையே விவாதம்
செல்வன் 🅂🄴🄻🅅🄰🄽 @selvanz என்ற பதிவர், ரஜினிகாந்த் யார்? அரசு பொறுப்புகளில் ஏதேனும் இருக்கிறாரா ரஜினிகாந்த்? எதற்காக அரசு தொடர்பான ட்வீட்டுகளில் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டார்? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு @NVandhiyadhevan என்பவர் பதில் கொடுத்திருக்கிறார். அதில், ரஜினிகாந்த் தமிழகத்தின் அடையாளம்; இதனை தயவு செய்து புரிந்து கொள்ளவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications