கடைசி நொடியில் பிரச்சனை.. விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிப்பு.. என்ன ஆனது சந்திரயான் 2?
நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரயான் 2 நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்திரயான் 2 கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக நிலவை நோக்கி சென்ற சந்திரயான் 2 இன்று நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பூமியை 22 நாட்கள் சுற்றிய சந்திரயான் நிலவை அடைய மொத்தம் 48 நாட்கள் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இன்று சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எப்படி
சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் s. பொதுவாக இஸ்ரோ பெரிய திட்டங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை பயன்படுத்தும். இது கிரையோஜெனிக் எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் ஆகும். சந்திராயன் 2 திட்டத்தை முடிக்க ஜிஎஸ்எல்வி ராக்கெட்டையும் சேர்த்து 940 கோடி ரூபாய்தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

என்ன இருக்கிறது
சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.

என்ன ராக்கெட்
விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 முதலில் பூமியை சுற்றி வந்தது. சந்திரயான் 2 தனது சோலார் பேனல்களை திறந்துவிட்டு பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்றி வந்தது. பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக இதன் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டது.

அடுத்து என்ன
சந்திரயான் 2 முதலில் பூமியை எதிர் கடிகார திசையில் சுற்றி வந்தது. நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து சென்றது.

விண்ணில் எவ்வப்பட்டது
சரியாக விண்ணில் ஏவப்பட்ட 23 நாள் கழித்து பூமியில் இருந்து சந்திரயான் 2 ஆனது 45000 கிமீ தூரத்திற்கு சென்றது. அப்போது சரியாக சந்திரயான் 2 பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. சந்திரயான் 2ல் உள்ள எஞ்சின் ஒன்றை ஆன் செய்து இது நிலவை நோக்கி அனுப்பப்பட்டது.

சரியாக சென்றது
சந்திரயான் 2ல் எஞ்சின் ஆன் செய்யப்பட்ட பின் அது நிலவை நோக்கி நகர தொடங்கியது. அதன்பின் சரியாக நிலவின் வட்டப்பாதையை சந்திரயான் 2 அடைந்தது. பூமியை எப்படி சந்திரயான் 2 எதிர் கடிகார திசையில் சுற்றியதோ அதேபோல் நிலவை சந்திரயான் 2 கடிகார திசையில் சுற்றியது. அதன்மூலம் நிலவிற்கு அருகில் சென்று அதன் வேகத்தை குறைத்துக்கொண்டது.

அருகில் சென்றது
நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, நீள்வட்ட பாதையில் சுற்றி சந்திரயான் 2 நிலவிற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக சென்றது. நிலவில் சரியாக வட்டப்பாதையை அடைந்தவுடன் சந்திராயனின் இருந்து ஆர்பிட்டர் எனப்படும் சாட்டிலைட் கழற்றி விடப்பட்டது. இதில் இருக்கும் விக்ரம் லேண்டர் தனியாக கழற்றிவிடப்பட்டது. கழற்றிவிடப்பட்ட ஆர்பிட்டார் நிலவை அடுத்த ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் போல சுற்றி தகவல்களை அனுப்பும்.

இன்று என்ன
சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டர் மிக சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டரை தரையிறக்கி உள்ளது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில எதிர் திரஸ்டர் எஞ்சின்கள் இயக்கப்பட்டு அது நிலவில் வேகமாக இறங்க தொடங்கியது.

வேகம் குறையும்
இந்த எஞ்சின்கள் எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கியது. சரியாக 2.1 கிமீ தூரம் வரை லேண்டர் சரியாக இறங்கியது. ஆனால் அதன்பின் பிரச்சனை ஏற்பட்டது.

என்ன பிரச்சனை
சரியாக 2.1 கிமீ தாண்டிய பின் திடீர் என்று லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2 கிமீலிருந்து வேகம் குறைக்கப்பட்டு லேண்டர் மெதுவாக இறக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் லேண்டருடன் தொடர்ந்து துண்டிக்கப்பட்டது. நிலவின் நிலப்பரப்பிலிருந்து 2.1 கி மீ உயரத்தில் இருக்கும்போது சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவி தகவல் தொடர்பை இழந்தது.

என்ன பேட்டி
இந்த நிலையில் சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.

நிலை என்ன
சந்திரயான் 2ன் நிலை என்ன என்பது குறித்து இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஆர்பிட்டர் சரியான பாதையில் உள்ளது. அதில்தான் முக்கியமான ஆய்வு சாதனங்கள் உள்ளதால் அதை வைத்துக் கொண்டு 95 சதவீத ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. எனவே சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூற முடியாது என்ற நிலையே தற்போதைக்கு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications