சந்திரயான் 3 சக்சஸ்! நாடே கொண்டாடும் போது இந்த 6 "கால்" ரோவர் பிஸியா என்ன செய்யுதுனு பாருங்கள்!
டெல்லி: நிலவில் இந்தியாவை ஒட்டுமொத்த நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் ரோவர் பிரக்யான் நிலவில் ஆய்வுகளை நடத்தி வருகிறது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. நேற்றைய தினம் சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரமும் ரோவர் பிரக்யானும் தரையிறங்கியது. ரோவர் பிரக்யான் நிலவில் இறங்கியதும் அங்கு ஒரு ரவுண்ட் வலம் வந்தது.

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடுகளும் கால் பதிக்காத நிலையில் இந்தியா முதல் நாடாக அங்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த 14 நாட்களும் 6 கால்களை கொண்ட பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை செய்யும்.
இந்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானின் ஆயுட்காலம் ஒரு நிலவு நாள் ஆகும். அதாவது 14 நாட்கள். நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அது போல் ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் ரசாயன பொருட்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும்.
அது போல் தரையிறங்கும் இடத்தில் நிலவில் மண், பாறைகள் இருக்கின்றன என்பதையும் இது ஆய்வு செய்யும். லேண்டரில் ரம்பா எனும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் அயனிகள், எலக்ட்ரான்கள் எவ்வளவு இருக்கின்றன ,அதன் அடர்த்தி என்ன என்பதை அளவிடும். நிலவில் தென் பகுதி குளிர்ச்சியான பகுதி. எனவே இங்கு வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் கருவியும் அனுப்பப்பட்டுள்ளது.
அது போல் நிலவில் நில அதிர்வு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யவும் ஒரு கருவி அனுப்பப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களும் தற்போது சூரிய வெளிச்சம் நிலவில் படும் என்பதால் ரோவர் சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்கும். அது எடுத்த செய்திகளை லேண்டர் தகவல்களாக பூமியில் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும். ரோவருடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இல்லாததால் அது லேண்டருடன் தொடர்பிலேயே இருக்கும்.
நிலவின் தென் பகுதியில் உறைந்த நிலையில் தண்ணீர் இருந்தால் ஆக்ஸிஜன், எரிபொருள், தண்ணீருக்கான ஆதாரமாக அது விளங்கும். இந்த ஆய்வைதான் ரோவர் மேற்கொள்ள போகிறது. நேற்றைய தினம் இந்த லேண்டரும் ரோவரும் தரையிறங்கிய காட்சிகளை இஸ்ரோ நேரலையாக ஒளிபரப்பியது. இந்த வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட்டனர்.
யூடியூப்பில் மட்டும் 80 லட்சம் பேர் பார்த்து பரவசமடைந்தனர். உலக தமிழர்கள், இந்தியர்கள் என வாழ்த்துகளை பரிமாறி கிட்டதட்ட நாமே நிலவில் இறங்கியது போன்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாடே கொண்டாடி வரும்நிலையில் ரோவர் நிலவை சுற்றி சுற்றி ஆய்வு செய்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications