முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்.. உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தகவல்
டெல்லி: டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த இந்து யுவ வாஹினி நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சிலர் பேசினர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விஷயத்தில் வழக்குப்பதிவு செய்ய தாமதித்த டெல்லி போலீசாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிமன்றம் விசாரித்த நிலையில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து யுவ வாஹினி நிகழ்ச்சி நடந்தது. சுதர்சன் தொலைக்காட்சி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹான்கே தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், இஸ்லாமியர்களை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தின. இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி போலீசார் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில் சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோதமாக யாரும் பேசவில்லை. இதனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பன போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இதை பார்த்த நீதிமன்றம் டெல்லி போலீசாரை கடுமையாக கடிந்து கொண்டது. இதனால் 2021 மே மாதம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் டெல்லி போலீஸார் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் துஷார் காந்தி டெல்லி போலீசாருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரும் வகையில் மனு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் டெல்லியில் நடந்த இந்து யுவ வாஹினி நிகழ்ச்சியில் டெல்லி போலீசார் சரியாக செயல்படவில்லை. தாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளது. தெஹ்சீன் பூனவல்லா வழக்கில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை டெல்லி காவல் துறை மீறியுள்ளது. இந்த வழக்கின்படி வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கு எதிராக உடனடியாக காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி போலீசார் அதனை மீறியுள்ளனர் என வாதிடப்பட்டது.
இந்த வேளையில் டெல்லி காவல்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கேஎம் நடராஜ் ஆஜராகி வாதாடினார். அப்போது, ‛‛இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையானது டெல்லி சாகேத் மெட்ரோ பாலிட்டனர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது சரியானதாக இருக்காது. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள் சமூக ஆர்வலர் துஷார் காந்தி சார்பில் டெல்லி போலீசாருக்கு எதிரான அவதூறு வழக்கு தொடரும் வகையிலான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications