Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபாநாயகராகும் நடிகர் என்டி ராமராவின் மகள்? சந்திரபாபு நாயுடுக்கு பாஜக ‛செக்’.. எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவியை கேட்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ‛செக்’ வைக்கும் வகையில் அவரது மனைவியின் சகோதரியை அந்த பொறுப்பில் நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சந்திரபாபு நாயுடு ஒப்புக்கொள்வாரா? என்பது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. ஏனென்றால் இதற்கு பின்னணியில் பாஜகவின் பெரிய பிளான் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் 240 தொகுதிகளில் வென்ற பாஜக தனது கூட்டணியில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்பிக்கள் உள்பட கூட்டணியில் உள்ள 52 எம்பிக்களின் உதவியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது.

daggubati purandeswari bjp lok sabha speaker chandrababu naidu telugu desam

பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார். அதோடு 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இதில் இதில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 கேபினட் அமைச்சர், ஒரு இணையமைச்சர் பொறுப்பை கேட்ட நிலையில் 2 கேபினட் அமைச்சர் பதவியை மட்டும் பாஜக வழங்கி உள்ளது.


இதனால் லோக்சபா சபாநாயகர் பொறுப்பு மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் சந்திரபாபு நாயுடு உறுதியாக உள்ளார். அதேபோல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் சபாநாயகர் பதவி மீது கண்வைத்துள்ளது.

மணிப்பூர் வன்முறைக்கு முதலில் தீர்வு காணுங்க.. மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ‛அட்வைஸ்’


ஆனால் பாஜக லோக்சபா சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் கூட்டணி அரசை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் குழப்பம் ஏற்படலாம். மேலும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் கூட்டணி மாறுவதில் பெயர் பெற்றவர்கள். இதனால் அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் சபாநாயகர் பதவியை பாஜக எம்பியை நியமிப்பது தான் சிறந்தது என்று ‛தாமரை’ தலைவர்கள் நினைக்கின்றனர்.

ஏனென்றால் கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறும்போதும், நம்பிக்கை வாக்கெடுப்பு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றில் சபாநாயகருக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது. இதனை உணர்ந்தே பாஜகவுக்கு தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் சபாநாயகர் பதவியை குறிவைத்துள்ள நிலையில் பாஜக அதனை வழங்க மறுக்கிறது.

‛ஒரு முஸ்லிம் கூட இல்லையே’.. இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை.. விவாதமான மோடியின் அமைச்சரவை


இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆந்திர மாநில பாஜக தலைவராகவும், ஆந்திர ராஜமுந்திரி லோக்சபா எம்பியுமான டகுபதி புரண்டேஸ்வரியை தேர்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இவரை தேர்வு செய்வதன் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கலாம் என அவர் நினைக்கிறார். அதாவது டகுபதி புரண்டேஸ்வரி மறைந்த நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்டி ராமராவின் மகள். என்டி ராமராவின் இன்னொரு மகளான புவனேஸ்வரியை தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார்.


அதன்படி பார்த்தால் டகுபதி புரண்டேஸ்வரி- புவனேஸ்வரி ஆகியோர் உடன்பிறந்த சகோதரிகள். என்டி ராமராவை ஏமாற்றி கட்சியை புவனேஸ்வரின் கணவரான என்டி ராமராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு அபகரித்து தலைவரானார். இது என்டி ராமராவின் குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக டகுபதி புரண்டேஸ்வரி, சந்திரபாபு நாயுடுவுடன் பேசுவதை தவிர்த்து உறவை துண்டித்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2004, 2009ல் எம்பியானார்.

அதன்பிறகு அவர் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனிமாநிலமாக பிரித்ததால் காங்கிரஸில் இருந்து அவர் விலகி பாஜகவில் சேர்ந்தார். கடந்த ஆண்டு அவர் ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கியது. இந்த 2 தேர்தல்களிலும் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதோடு சந்திரபாபு நாயுடு டகுபதி புரண்டேஸ்வரியை புகழ்ந்தார். அவரது உழைப்பும் கட்சியின் வெற்றிக்கு காரணம் என்றார். இது இருவரின் குடும்பத்துக்கும் இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதாக பாஜக மேலிடம் நினைக்கிறது. இதனால் டகுபதி புரண்டேஸ்வரியை சபாநாயகராக ஆக்கவும், சந்திரபாபு நாயுடுவும் பிரச்சனைகளை மறந்து தனது மனைவியின் சகோதரி என்ற வகையில் பச்சை கொடி காண்பித்து ஆதரவு தெரிவிப்பார் என பாஜக மேலிடம் கணக்கிடுகிறது.

ஆனால் டகுபதி புரண்டேஸ்வரிக்கு இன்னும் சந்திரபாபு நாயுடு மீதான கோபம் தணியவில்லை என்றே சொல்லப்படுகிறது. கூட்டணியாக தேர்தலில் களம் கண்டாலும் கூட அவர் சந்திரபாபு நாயுடுவுடன் தேசிய தலைவர்கள் வந்தபோது மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார். மற்றபடி அவர் இன்னும் சந்திரபாபு நாயுடு பற்றி எதுவும் பேசவில்லை. சந்திரபாபு நாயுடு அவரை புகழ்ந்தும் கூட இன்னும் அவர் நன்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் தெலுங்கு தேசம் கட்சியை அபகரித்த கோபம் என்பது சந்திரபாபு நாயுடு மீது டகுபதி புரண்டேஸ்வரிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் டகுபதி புரண்டேஸ்வரியை சபாநாயகர் பதவி வழங்க முயன்றால் சந்திரபாபு நாயுடு ஒப்புக்கொள்வாரா? என்பதும் பெரிய கேள்விக்குறியாகும். ஏனென்றால் முன்பு தந்தை என்டிஆரின் கட்சியை அபகரித்ததை மனதில் வைத்து சபாநாயகராக டகுபதி புரண்டேஸ்வரி பழிவாங்கவும் வாய்ப்பு வரலாம். இதனால் சந்திரபாபு நாயுடும் உஷாராகி உள்ளார். அதோடு அவருக்கு பெரிய தலைவலி உருவாகி உள்ளது.

அதாவது டகுபதி புரண்டேஸ்வரியை சபாநாயகராக்க ஓகே சொல்லி குடும்ப பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாமா? அப்படி ஒகே கூறினால் டகுபதி புரண்டேஸ்வரி பழிவாங்காமல் இருப்பாரா? இல்லாவிட்டால் டகுபதி புரண்டேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவிக்கலாமா? என்ற இக்கட்டில் சந்திரபாபு நாயுடுவை பாஜக சிக்க வைத்துள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+