‛ஒரு முஸ்லிம் கூட இல்லையே’.. இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை.. விவாதமான மோடியின் அமைச்சரவை
டெல்லி: நேற்று முன்தினம் பிரதமாக 3வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்றார். மேலும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவை தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஏனென்றால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 ஆட்சியில் இஸ்லாமியர் இல்லாமல் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. நம் நாட்டில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் 272 இடங்கள் கிடைக்கவில்லை.

மாறாக பாஜக 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் 52 எம்பிக்கள் உதவியுடன் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகு 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
மோடி 2.O டூ 3.O! கிரண் ரிஜிஜு முதல் சிந்தியா வரை! இலாக்காக்கள் மாற்றப்பட்ட மத்திய அமைச்சர்கள் யார்
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் இல்லாமல் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 200 மில்லியன் (அதாவது 2 கோடி) இஸ்லாமியர்கள் வசிக்கும் நிலையில் பிரதமர் மோடியின் 3.0 மத்திய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.'
"6+1.." மோடி அமைச்சரவையில் உள்ள முன்னாள் முதல்வர்கள்.. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் என்ன
1999ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு முறை மத்தியில் ஆட்சி அமையும்போது குறைந்தபட்சம் ஒரு இஸ்லாமியருக்காவது மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 1999ல் பாஜகவின் வாஜ்பாய் பிரதமரானார். அப்போது 2 இஸ்லாமியர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தனர். ஷாநவாஸ் ஹுசைன் மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
மோடி 3.0.. பிரதமர் தன் வசம் வைத்துள்ள துறைகள் என்ன! ஆஹா இது முக்கியம் ஆச்சே.. நோட் பண்ணுங்க
அதன்பிறகு 2004ல் ஆட்சி மாற்றம் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமரானார். அப்போது 4 இஸ்லாமியர்கள் மத்திய அமைச்சர்களாகினர். அதன்பிறகு 2009ல் மீண்டும் மன்மோகன் சிங் பிரதமானார். அப்போது 5 இஸ்லாமியர்கள் மத்திய அமைச்சர்களாக செயல்பட்டனர். இதையடுத்து 2014ல் ஆட்சி மாற்றம் நடந்தது.
2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமானார். அப்போது ராஜ்யசபா எம்பியாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2019ல் பாஜக 2வது முறையாக வென்றது. மோடி மீண்டும் பிரதமரானார். அப்போது பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
ராஜ்யசபா எம்பியாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி 3 ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்தார். 2022ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பிரதமர் மோடியின் 2.0 ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகள் இஸ்லாமிய அமைச்சர் இல்லாமல் கடந்தது.
இத்தகைய சூழலில் தான் தற்போது மீண்டும் மோடி தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய ஆட்சியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் உள்ள நிலையில் ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
நம் நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் அமைக்கப்பட்ட முதல் மத்திய அமைச்சரவை என்ற பெயரை இந்த புதிய அமைச்சரவை பெற்றுள்ளது. அதேவேளையில் லோக்சபா தேர்தலில் தோற்றாலும் சீக்கியம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய மக்கள் தொகையில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்கு கூட மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கி உள்ளன. முன்னதாக இந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
மாறாக லோக்சபா தேர்தலில் மொத்தம் 24 பேர் முஸ்லிம்களை மக்கள் எம்பிக்களாக தேர்வு செய்தனர். இதில் ‛இந்தியா’ கூட்டணியில் 21 பேர் எம்பிக்களாக உள்ளனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருந்து அப்துல் ரஷித் ஷேக், லடாக்கில் இருந்து முகமது ஹனீபா ஆகியோர் சுயேச்சைகளாக வென்றனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications