"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து
டெல்லி: பள்ளி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து ஐ லவ் யூ சொன்னதற்காக இளைஞர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். சிறார்களிடம் இதுபோல செய்வது போக்சோ கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், அவருக்குச் சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறார்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. அதில் சிறார்களை பாதுகாக்கும் மிக முக்கியமான சட்டம் தான் போக்சோ. சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பதைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பல குற்றவாளிகள் மீது பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.

16 வயது சிறுமி
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதாவது 16 வயது பள்ளி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் மீது புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அவருக்குக் கடந்த 2016ம் ஆண்டு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
ஐ லவ் யூ
அதாவது 2016 ஜனவரியில் ராய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி அந்த நபர் மீது புகாரளித்திருந்தார். அதில் தனது அண்டை வீட்டுக்காரரான அஜித் ராவ் என்பவர் சுமார் நான்கு மாதங்களாகத் தன்னை பள்ளிக்குச் செல்லும் வழியில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பார்க்கும் இடங்களில் எல்லாம் "ஐ லவ் யூ" என கூறியதாகவும், பொது இடங்களில் தனது பெயர்களை எழுதி அவமானப்படுத்தியதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார்.
இந்தச் சம்பவங்களால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கும் பாதுகாப்பற்ற உணர்வுக்கும் ஆளானார். அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தான் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டையை எதிர்த்து அந்த நபர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அர்விந்த் குமார் வர்மா இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தார்.
பாலியல் அத்துமீறல்
வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் , "பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் தெளிவாகும் நிலையாகவும் இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் தினமும் பின்தொடர்ந்து, 'ஐ லவ் யூ' என்று கூறி தொந்தரவு செய்ததாக அந்த சிறுமி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலம் அந்த சிறுமியின் தாயார், அரசு தரப்பு சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். மேலும், கீழ் நீதிமன்றத் தீர்ப்பில் சட்டவிரோதமோ குறைபாடோ இல்லை என உறுதி செய்தார். அதாவது இதுபோல சிறுமிகளைப் பின்தொடர்ந்து ஐ லவ் யூ எனச் சொல்வது பாலியல் அத்துமீறல் என்றார்.
பாலியல் தொல்லைக்கு ஆளான நபர் தெளிவாகச் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அது நம்பும் வகையிலேயே இருப்பதால் அதை உறுதிப்படுத்தத் தேவையில்லை என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், ஆதாரங்கள் உறுதியாகவும் முரண்பாடுகள் இல்லாமல் இருப்பதாகவும் அரசுத் தரப்பும் குற்றங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது என்றும் நீதிபதி தெரிவித்தார். சிறார்களிடம் இதுபோல நடந்து கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தொல்லையாகும் என உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
தண்டனை குறைப்பு
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பூஜா யாதவ் மற்றும் சிவேந்து பாண்டியா முதலில் கீழமை நீதிமன்ற தீர்ப்பு குழப்பும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தனர். இருப்பினும், நீதிபதி அந்த தீர்ப்பில் குழப்பம் எதுவும் இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டதால் பிறகு பின்னர் தண்டனைக் குறைப்பிலேயே கவனம் செலுத்தினர். உயர் நீதிமன்றமும் அந்த நபர் குற்றவாளி தான் என்பதை உறுதி செய்த நிலையில், தண்டனையை மட்டும் குறைக்கச் சம்மதித்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு வேறு குற்றப் பின்னணி இல்லாததைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனையைக் குறைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.. அவரது 7 ஆண்டு சிறைத் தண்டனை 3.5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications