Murder: "உன் அப்பாவை கொன்னுட்டேன்! ரெட் கலர் சூட்கேஸில் பாடி இருக்கு" மகளுக்கு ஷாக் கொடுத்த தாய்!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் மனைவி ஒருவர் தனது கணவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்துவிட்டு, திருமணமாகி மாமியார் வீட்டில் இருக்கும் தனது மகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு, மும்பைக்கு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜஷ்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் பகத் (43). இவரது மனைவி மங்கரீதா பகத் (40). இவர்களுக்கு 23 வயதில் மகள் உள்ளார். இவருக்கு திருமணமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் சந்தோஷும் மங்கரீதாவும் மும்பை சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்ததாக தெரிகிறது.
மங்கரீதா மும்பையில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து ஒரு இரும்புச் சுத்தியலை கொண்டு மங்கரீதா கணவர் சந்தோஷை பலமாக தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் சந்தோஷ் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து கணவரின் சடலத்தை ஒரு போர்வையால் சுற்றிய மங்கரீதா, சிவப்பு நிற ட்ராலியில் அடைத்து வீட்டிற்குள் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கோர்பாவில் வசிக்கும் தனது மகளுக்கு போன் செய்த மங்கரீதா, "உன் அப்பாவை கொலை செய்துட்டேன். உடலை சூட்கேஸில் வைத்திருக்கிறேன்" என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மகள், தனது கணவருடன் உடனடியாக தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது தனது சித்தப்பா வினோத்திற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உடனே போய் வீட்டில் பார்க்குமாறு கூறினாராம்.
இதையடுத்து சந்தோஷின் சகோதரர் வினோத், போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு அவர்களுடன் அண்ணன் வீட்டிற்கு சென்றார். அங்கு மங்கரீதா சொன்ன இடத்தில் ஒரு சிவப்பு ட்ராலி இருந்தது. அதை திறந்து பார்த்த போது போர்வையால் சுற்றப்பட்ட சந்தோஷின் உடல் இருந்தது.
அவரது முகத்திலும் கைகளிலும் காயங்கள் இருந்தன. உடல் முழுக்க ரத்தக்காயங்கள் இருந்தன. மங்கரீதா எங்கே சென்றார் என தெரியவில்லை. அவர் மும்பையில் பணியாற்றி வருவதால் அங்கு தப்பிச் சென்றாரா என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜஷ்பூர் எஸ்எஸ்பி சஷி மோகன் சிங் கூறுகையில், "கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் வினோத் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் மனைவியே கணவரைக் கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.
அவர் மும்பைக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதால், அவரைக் கைது செய்யக் காவல்துறைக் குழு ஒன்று மும்பைக்கு விரைந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications