புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபரீசன்! கட்டியம் கூறும் ஸ்பெஷல் விசிட்!கூட இருப்பது யாருன்னு பாருங்க!
டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அங்கிருக்கும் சிறப்பம்சங்களையும், கட்டிட வேலைபாடுகளையும் பார்வையிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை நாடாளுமன்ற வளாகத்தில் வரவேற்ற திமுக எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, கதிர் ஆனந்த், கவுதம சிகாமணி, உள்ளிட்டோர் அவரை நாடாளுமன்ற லாபிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை வரவேற்ற கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சபரீசனின் நாடாளுமன்ற வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு திமுகவில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்படக் கூடும் என ஆருடங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த விசிட் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேபோல் டெல்லி அரசியலில் கனிமொழிக்கு போட்டியாக சபரீசன் என விமர்சனங்களும், கணிப்புகளும் முன் வைக்கப்பட்ட நிலையில், யாரும் யாருக்கும் போட்டியில்லை என்பதை உணர்த்தும் வகையில் இன்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு முரசொலி மாறனை போல் ஸ்டாலினுக்கு சபரீசன் என இன்று நேற்றல்ல கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் ஒரு பேச்சு நிலவி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவுக்கு எதிராக தேசியளவில் திமுக சண்டமாருதம் செய்து வரும் நிலையில் மத்திய பாஜக அரசு கட்டிய நாடாளுமன்ற கட்டிடத்தை சபரீசன் சுற்றிப்பார்க்க வந்தது தான் இங்கே பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தை சபரீசன் மட்டுமின்றி நடிகை தமன்னா உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த ஆளுமைகளும் பார்வையிட்டுள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1,272 உறுப்பினர்கள் அமரும் அளவுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என அந்த இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications