"எல்லை பிரச்சினையை தீர்க்க இது தான் ஒரே வழி.." சீன அதிகாரிகளிடம் அஜித் தோவல் ஓபன் டாக்.. பின்னணி
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோசமான சூழலே நிலவி வந்தது.
அதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், நிலைமை மேலும் மோசமானது. இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வரும் சூழலில் இது மிகவும் பதற்றமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த உடன் வாங் யீ நேற்று நேரடியாக டெல்லி வந்தடைந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். இந்த பயணம் கடைசி வரை உறதி செய்யப்படாமலே இருந்தது. இந்தச் சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று சந்தித்துப் பேசினார்.

அஜித் தோவல் உடன் சந்திப்பு
இந்தச் சந்திப்பின் போது, எல்லையில் பிரச்சினை ஏற்படும் இடங்களில் எல்லாம் வீரர்கள் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு மந்திரி வாங் யீயிடம் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை இயல்பாக நடைபெற வேண்டும் என்றும் எல்லையில் ஏற்படும் சிக்கலைப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் தோவல் குறிப்பிட்டார். மேலும், இரு நாட்டு நடவடிக்கைகள் பரஸ்பர பாதுகாப்பு உணர்வை மீறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை முக்கியம்
தற்போது நிலவும் சூழலில் பரஸ்பர நலன் இல்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை மீட்டெடுப்பது பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க முறையான பேச்சுவார்த்தை முக்கியம் என்றும் அஜித் தோவல் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளும் அமைதியை மீட்டெடுக்க ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் அமைதி பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோசமான உறவு தொடரும் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சந்திப்பு
இந்தச் சந்திப்பில் இரு தரப்பும் ஒத்த கருத்துடன் செயல்படுவது குறித்தும், நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைவில் தீர்ப்பது குறித்தும் இரு தரப்பும் விவாதித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் உறவுகளைக் கையாள்வதில் முதிர்ச்சி மற்றும் நேர்மை அவசியம் என்பதும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பிற்குப் பின், சீன அமைச்சர் வாங் யீ வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சீனாவுக்கு வர அழைப்பு
அஜித் தோவல் உடனான சந்திப்பின் போது, சீனாவுக்கு வருமாறு சீனப் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்தனர். இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினை தீர்ந்த பின்னர், கண்டிப்பாகச் சீனாவுக்கு வருவதாக அஜித் தோவல் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியாக மொத்தம் 15 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications