டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக்: பாங்கோங் த்சோ ஏரி பகுதிகளில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா - வெளியுறவு அமைச்சகம்

Google Oneindia Tamil News

லடாக்: பாங்கோங் த்சோ ஏரி பகுதிகளில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா : வெளியுறவு அமைச்சகம்

Recommended Video

    India தான் எல்லாத்துக்கும் காரணம்.. பழியை போடும் China

    டெல்லி: லடாக் பிராந்தியத்தில் பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் நிலைமையை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது.

    பாங்கோங் த்சோ ஏரியை குறிவைத்து சீனா எல்லையில் மீண்டும் ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த முயற்சிகளை முறியடித்து சீனா ராணுவத்தினரை விரட்டியடித்தனர்.

    China made provocative military attempts near Pangong Tso Lake, says MEA

    ஆனால் இந்தியா மீது சீனா குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா, எல்லையில் சீனா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொண்டது.

    70 ஆண்டுகளில் பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்கவே இல்லை.. கூசாமல் பொய்யை அள்ளிவிடும் சீனா70 ஆண்டுகளில் பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்கவே இல்லை.. கூசாமல் பொய்யை அள்ளிவிடும் சீனா

    இதனால் இந்திய ராணுவம் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டது என்றார். மேலும் இருநாடுகளிடையே பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; இந்த நிலையில்தான் ஆக.31-ல் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது ஆத்திரமூட்டும் செயல் என்றார்.

    சீனாவின் வெளியுறவு அமைச்சகமோ, 70 ஆண்டுகளில் பிற நாட்டின் ஒரு அங்குலத்தைக் கூட ஆக்கிரமிக்க சீனா முயன்றதே இல்லை என ஒரு அப்பட்டமான பொய்யை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ministry of External Affairs said that Chinese troops again engaged in provocative actions near Pangong Tso Lake.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X