மொத்த குடும்பத்தையும் உளவு பார்க்கும் சீனா? உங்க வீட்டில் இந்த பொருட்கள் இருக்கா? ஜாக்கிரதை
டெல்லி: சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நம்முடையை ஒவ்வொரு நடவடிக்கைகளும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் பரபரப்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
நாம் தினமும் ஏராளமான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த பொருட்கள் அனைத்தும் முழுவதுமாக நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதா? என்றால் அப்படி இருக்க வாய்ப்பில்லை.

குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்கள், லேப்டாப், பிரிட்ஜ், கார்கள், எல்இடி பல்புகள் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பற்றி நாம் ஆய்வு செய்தால் அது வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம். இல்லாவிட்டால் அதில் வெளிநாடுகளை சேர்ந்த பொருட்கள் பொருத்தப்பட்டு இருக்கலாம்.
குறிப்பாக நம் நாட்டை பொறுத்தவரை நம்மில் பலரும் சீனா தயாரிப்புகளை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இப்படி சீனா தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ரேடார்கள் மூலம் நம்மையும், நம் குடும்பத்தையும் எளிதாக கண்காணிக்க முடியும் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொரட்பாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே என்பது நம் நாட்டில் மொத்தம் உள்ள 323 மாவட்டங்களில் இருந்து 24 ஆயிரம் பேர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள். இதில் 25 சதவீதம் பேர் ஒன்று அல்லது 2 சீனா தயாரிப்புகளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் 5 சீனா தயாரிப்புகளையும், 4 சதவீதம் பேர் 5 முதல் 10 சீனா தயாரிப்பு பொருட்களையம், 2 சதவீதம் பேர் 10க்கும் அதிகமான பொருட்களையும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி 27 சதவீதம் பேர் நாங்கள் சீனா தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை கணக்கிட்டு சொல்ல முடியவில்லை எனவும், 21 சதவீதம் பேர் எந்த சீனா தயாரிப்புகளையும் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பார்த்தால் சுமார் 79 சதவீதத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீனா தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் செல்போன், லேப்டாப், பிரிட்ஸ், காரின் உதிரி பாகங்கள், எல்இடி பல்புகள் உள்பட பலவற்றை கூறலாம். இந்த பொருட்கள் உங்களுக்கு ஆபத்தானதாக மாறலாம். குறிப்பாக இந்த பொருட்கள் ஒவ்வொருவரையும், அவர்களின் குடும்பத்தையும் கண்காணிக்கும் அல்லது உளவு பார்க்கும் கருவியாக கூட செயல்பட வாய்ப்புள்ளது.
பல சீனா செயலிகள் நம் டேட்டா, வீடியோ, போட்டோக்களை நமக்கு தெரியாமல் சீனாவுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி நாம் பயன்படுத்தும் சீன உற்பத்தி பொருட்கள் மூலம் அந்நாடு ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதாவது இந்த சாதனங்கள் தொடர்புடைய சீன செயலிகளில் பதிவாகும் வீடியோ, போட்டோ போன்ற பயனாளர் விவரங்களை சீனா கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பெரும்பாலும் சீனாவில் உள்ள சர்வரில்தான் இந்திய குடும்பங்களின் அனைத்து வகை டேட்டாக்களும் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் உதாரணமாக நம் வீட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை பொருத்தி வைத்திருப்பதாக நினைத்துகொள்வோம். இந்த கண்காணிப்பு கேமரா நம் வீட்டின் போட்டோ மற்றும் வீடியோவை எடுத்து சேமித்து வைத்து கொள்ளும். இப்படி சேமிக்கப்படும் போட்டோக்கள், வீடியோக்கள் சீனாவில் இருக்கும் சர்வரில் தான் இருக்கும். இதன்மூலம் சீனாவால் நாம் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications